32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 50)
கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம் சினிமா

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’ ஆகும். இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. கூழாங்கல் படம் பார்த்ததும் நாங்கள் […]

14/08/2024 Dinesh R
முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ் அயல் சினிமா

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

ஷாருக் கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், ஆப்ராம் கானும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாஸா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பேரி ஜென்கின்ஸின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவில் டிசம்பர் 20, 2024 அன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கெளரவ பூமியின் கடைசி ராஜாவான முஃபாஸாவின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இப்படம். இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கானும், […]

12/08/2024 Dinesh R
நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம் சினிமா

நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம்

பல கதாபாத்திரங்களில் தனது பன்முக நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போச்சர்’ இணைய தொடர் என தானேற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ்ப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் […]

12/08/2024 Dinesh R
லயோலா கல்லூரி: திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ கோர்ஸ் துவக்கம் சினிமா

லயோலா கல்லூரி: திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ கோர்ஸ் துவக்கம்

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து, இன்று ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை விஸ்காம் ப்ரிவியூ தியேட்டரில் “டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்” என்ற பிரீமியம் படிப்பைத் தொடங்குவதைப் பெருமையுடன் அறிவித்தது. இந்தத் தனித்துவமான பாடத்திட்டம் கலர் கார்பென்டர் எனும் நிறுவனத்தின் இயக்குநர்கள் லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான திருமதி மாதவி இளங்கோவன் மற்றும் திரு. ஜான் […]

12/08/2024 Dinesh R
கவுண்டம்பாளையம் விமர்சனம் இது புதிது

கவுண்டம்பாளையம் விமர்சனம்

ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘குழந்தை’ ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், ‘வா பிசையலாம்’ […]

12/08/2024 Dinesh R
மட்கா – ஃபர்ஸ்ட் லுக் | வருண் தேஜ் Movie Posters

மட்கா – ஃபர்ஸ்ட் லுக் | வருண் தேஜ்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் […]

11/08/2024 Dinesh R
முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர் Trailer

முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர். இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் […]

11/08/2024 Dinesh R
“சினிமா: சமூகத்தில் பாதிப்பைத் தரும்” – விஷ்ணு விஷால் | ஹாட் ஸ்பாட் 2 சினிமா

“சினிமா: சமூகத்தில் பாதிப்பைத் தரும்” – விஷ்ணு விஷால் | ஹாட் ஸ்பாட் 2

  மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், அப்படத்தின் இரண்டாம்.பாகத்தை வழங்குகிறார். கேஜேபி டாக்கீஸ் & செவன் வாரியர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை கிரியேட்டிவ் ப்ரொடக்‌ஷன் மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கும், KJB டாக்கீஸ் […]

10/08/2024 Dinesh R
“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி சினிமா

“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இயக்குநர் B.ராமச்சந்திரன், “பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி […]

10/08/2024 Dinesh R
பேச்சி – வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் சினிமா

பேச்சி – வெற்றிகரமான 2ஆவது வாரத்தில்

வெயிலோன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன், “சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற […]

10/08/2024 Dinesh R
அந்தகன் விமர்சனம் இது புதிது

அந்தகன் விமர்சனம்

அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் […]

09/08/2024 Dinesh R
மின்மினி விமர்சனம் இது புதிது

மின்மினி விமர்சனம்

கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள். பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் […]

09/08/2024 Dinesh R
TOXIC: A Fairytale For Grown Ups | 8 – 8 – 8 அயல் சினிமா

TOXIC: A Fairytale For Grown Ups | 8 – 8 – 8

நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில், கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர். எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில்களுக்குச் செல்லுவார் யாஷ். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் […]

07/08/2024 Dinesh R
“தங்கலானுக்கும் எனக்குமான ஆன்மிகத் தொடர்பு” – விக்ரம் இது புதிது

“தங்கலானுக்கும் எனக்குமான ஆன்மிகத் தொடர்பு” – விக்ரம்

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீயான் விக்ரம், ”இந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர்தான். படத்தில் நாங்கள் […]

06/08/2024 Dinesh R
“தங்கலான் | கருணையற்ற மனிதனாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது” – பா. ரஞ்சித் சினிமா

“தங்கலான் | கருணையற்ற மனிதனாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது” – பா. ரஞ்சித்

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித், “படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் […]

06/08/2024 Dinesh R