32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 48)
திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை Others

திரு. மாணிக்கம் | விஷால் சந்திரசேகரின் இசைக்கோர்வை

நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சுகுமார் ஒளிப்பதிவில், பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ள திரு.மாணிக்கம் திரைப்படத்திற்காக சீதாராமம் புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை உருக வைக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு […]

24/08/2024 Dinesh R
கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல் OTT

கனா காணும் காலங்கள் – சீசன் 3 ஆகஸ்ட் 30 முதல்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது. கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா […]

24/08/2024 Dinesh R
“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால் OTT

“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

ஜீ5, மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வரலாற்றுப் படைப்பான ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும் வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசீகரிக்கும் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது. மனோரதங்கள் படத்தின் […]

24/08/2024 Dinesh R
1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர் OTT

1000 பேபிஸ் | டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஸ்பென்ஸ் தொடர்

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” தொடர், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாராத் திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. “1000 பேபிஸ்” தொடரில் நீனா குப்தாவும், ரகுமானும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார். நஜீம் கோயா, அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் […]

23/08/2024 Dinesh R
மலை | சுரண்டலுக்கு எதிரான இயற்கையின் பதில் சினிமா

மலை | சுரண்டலுக்கு எதிரான இயற்கையின் பதில்

ப்ளூ ஸ்டார் வெற்றியைத் தொடர்ந்து லெமன் லீஃப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தை லெமன் லீஃப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தியும், சவுந்தர்யா கணேஷ்மூர்த்தியும் தயாரித்துள்ளனர். யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. மனிதர்களைப் போல விலங்குகளும் தாவரங்களும் மலைகளும் ஆறுகளும் நீர்நிலைகளும், இந்த பூமியில் அதிமுக்கியமானதாக […]

23/08/2024 Dinesh R
வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம் அயல் சினிமா

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராகக் களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்தத் திரைப்படம் அவரது கலையுலகப் பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர […]

23/08/2024 Dinesh R
கொட்டுக்காளி விமர்சனம் இது புதிது

கொட்டுக்காளி விமர்சனம்

கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான […]

23/08/2024 Dinesh R
வாழை விமர்சனம் இது புதிது

வாழை விமர்சனம்

வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். […]

23/08/2024 Dinesh R
க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர் Trailer

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

க்ரேவன் தி ஹண்டர் என்பது மார்வெலின் மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் எப்படி, ஏன் உருவானார் என்பது பற்றிய கதை. அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் உடன், மார்வெலின் மிகப் பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.  ஆங்கில டிரெய்லர்: https://youtu.be/_y6O-tcfhBI தெலுங்கு டிரெய்லர்: https://youtu.be/krYauKDFXCE டிசம்பர் 13 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் ‘க்ரேவன் தி […]

23/08/2024 Dinesh R
தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி இது புதிது

தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி

(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.) //தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. // படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் […]

22/08/2024 Dinesh R
சாலா விமர்சனம் இது புதிது

சாலா விமர்சனம்

விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. […]

22/08/2024 Dinesh R
கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர் சமூகம்

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்குத் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கெனத் தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாகச் செயல்பட்டு […]

22/08/2024 Dinesh R
“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம் சினிமா

“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ”இந்தப் படத்தைத் தொடங்கும் போது, இது போன்ற ஒரு கதை, இது போன்றதொரு மக்கள், இது போன்றதொரு வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு, இன்னல்கள் சவால்கள் என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தைத் தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை, சுலபமாக கிடைக்காத ஒரு […]

22/08/2024 Dinesh R
“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம் சினிமா

“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம்

ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் பா. ரஞ்சித், “திரைப்படங்கள் ஏன் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் திரையுலகில் நுழைந்தேன். இந்தக் கேள்வியுடன் தான் என்னுடைய திரைப் பயணம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் உருவான தங்கலான் முக்கியமான விவாதத்தையும், முக்கியமான வெற்றியையும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அளித்த அனைவருக்கும் நான் இந்தத் […]

22/08/2024 Dinesh R
“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன் சினிமா

“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன், ”தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்குக் கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் முழுமை அடையாத முதல் பிரதியை […]

22/08/2024 Dinesh R