32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

435 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 29
செய்திகள் வரிசை (பக்கம் 4)
அகண்டா 2: தாண்டவம் | 2025 ஆம் ஆண்டின் அதிரடி பக்திப்பாடல் Songs

அகண்டா 2: தாண்டவம் | 2025 ஆம் ஆண்டின் அதிரடி பக்திப்பாடல்

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்” இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. நேற்று முழுப் பாடலும் […]

16/11/2025 Dinesh R
SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம் அயல் சினிமா

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

இறக்க மறுக்கும் அழிவில்லாத நாயகனான கோஷேய், முதல்பாகமான சிசு (SISU) படத்தில், தங்கக்கட்டிகளுக்காக நாஜிக்களை துவம்சம் செய்திருப்பார். நவம்பர் 21 வெளிகாயவுள்ள அதன் அடுத்த பாகத்தில், தன் குடும்பத்தைக் கொன்ற இரஷ்ய இராணுவ வீரரைப் பழிவாங்கக் களம் இறங்குகிறார் நாயகன். மனித இனத்தின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்றான பழிவாங்கும் உணர்ச்சிதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே ரத்தம் தகிக்கும் அந்தத் தகிப்பினை உணர முடிகிறது. ஒரு மனிதனின் அந்தப் பழி வாங்கும் தகிப்பைத் திரையில் கொண்டு வந்திருக்கும் […]

14/11/2025 Dinesh R
Kantara: Chapter 1 விமர்சனம் அயல் சினிமா

Kantara: Chapter 1 விமர்சனம்

காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, […]

02/10/2025 Dinesh R
Baby Girl – நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் Movie Posters

Baby Girl – நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும், அதிரடி த்ரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 5 அன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் த்ரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மையக் கதாப்பாத்திரமாக நிவின் பாலி உள்ளார். இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற […]

09/09/2025 Dinesh R
அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து Trailer

அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ ட்ரைலர் – பிரபாஸ் வாழ்த்து

அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, ‘காட்டி’ எனும் அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில், காட்டி ட்ரைலர் குறித்துப் பட வெளியீட்டிற்கு முன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரமும் நண்பருமான அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவர், “காட்டி ரிலீஸ் ட்ரைலர் ரொம்பத் தீவிரமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. […]

05/09/2025 Dinesh R
லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல் அயல் சினிமா

லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த லோகா: சாப்டர் 1 – சந்திரா உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் […]

05/09/2025 Dinesh R
நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer Trailer

நிஷாஞ்சி ட்ரெய்லர் | Nishaanchi trailer

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான ‘நிஷாஞ்சி’ படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே […]

04/09/2025 Dinesh R
“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா அயல் சினிமா

“மிராய்: எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்” ஆகும். பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தேஜா சஜ்ஜா, “ஆக்‌ஷன், அட்வென்ட்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் – மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். […]

02/09/2025 Dinesh R
சிரஞ்சீவி – ஏன் அவர் மெகா ஸ்டார்? அயல் சினிமா

சிரஞ்சீவி – ஏன் அவர் மெகா ஸ்டார்?

மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல் பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது […]

01/09/2025 Dinesh R
சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ் அயல் சினிமா

சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின்  புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட […]

01/09/2025 Dinesh R
Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா அயல் சினிமா

Wayfarer Films – துல்கர் சல்மானின் லோகா

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப்படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் வேஃபேரர் ஃபிலிம்ஸ்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்தின் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை […]

01/09/2025 Dinesh R
Lokah Chapter 1: Chandra விமர்சனம் அயல் சினிமா

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி […]

31/08/2025 Dinesh R
His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி அயல் சினிமா

His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி

‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாஸ்’ எனும் ஹிந்தித் திரைப்படம், இந்தியப் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள திரிக்கப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஓர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியரின் பயணத்தைப் பற்றியதாகும். மன்பிரீத் சிங் தாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, பஞ்சகர்மா ப்ரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம், பார்வையாளர்களைத் தங்கள் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கவும், வரலாற்று உண்மைகளை விமர்சன ரீதியாக மறு மதிப்பீடு செய்யவும், கடந்த காலத்தைப் பற்றிய அவர்களின் அடிப்படை புரிதலை மறுபரிசீலனை செய்யவும் தூண்டும். இந்திய வரலாற்றை […]

28/08/2025 Dinesh R
Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல் அயல் சினிமா

Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

ரசிகர்களைப் பரவசப்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெளியான மகா அவதார் நரசிம்மா முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் நரசிம்மா’ இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் இப்படம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது […]

03/08/2025 Dinesh R
Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக் Songs

Vibe இருக்கு பேபி | தேஜா சஜ்ஜா | ரித்திகா நாயக்

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமனேனி, டி. ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா, ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தைக் கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். […]

28/07/2025 Dinesh R