Shadow

அயல் சினிமா

பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திவரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர் பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் பேசிய வசனகர்த்தா ஆர் பி பாலா, “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு ...
முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது. பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக வளர்கின்றனர். இவர்கள் வாழும் நிலத்தை அபகரிக்க வெண்சிங்கப்படை ஒன்று வருகிறது. அந்தப் படையை எதிர்கொள்ள இயலாமல் டேக்கா, முஃபாசா இருவரும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் போது நடக்கும் சண்டை ஒன்றில், வெண்சிங்கப் படையின் இளவரச சிங்கத்தை, முஃபாசா கொன்றுவிடுகிறது. இதனால் வெண்சிங்க ராஜா முஃபாசாவை பலி வாங்கத் துரத்துகிறது. துரத்தலை ஒரு கட்டத்தில் நேர்கொள்ளும் முஃபாசா எ...
ராஷ்மிகா மந்தனா | தி கேர்ள்பிரண்ட் – அழகான காதல் கவிதை

ராஷ்மிகா மந்தனா | தி கேர்ள்பிரண்ட் – அழகான காதல் கவிதை

Teaser, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்" ஆகும். பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள "தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசரை, நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று வெளியிட்டார். படம் குறித்து விஜய் தேவரகொண்டா, " 'தி கேர்ள்பிரண்ட்' டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரசியமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் ராஷ்மிகாவைச் சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். ...
நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா – புராண இதிகாசப்படத்தில் அறிமுகம்

நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா – புராண இதிகாசப்படத்தில் அறிமுகம்

அயல் சினிமா, இது புதிது, திரைத் துளி
சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ், லெஜண்ட் புரொடக்‌ஷன்ஸ் M தேஜேஸ்வினி நந்தமூரி வழங்கும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது.பழம்பெரும் நடிகர் நந்தமூரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்‌ஷக்ஞ்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்ஞ்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாக இருக்கும். மோக்‌ஷக்யா இப்படத்திற்காக நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சியைப் பெற்று வருகிறார். இந்நிலையில் மோக்‌ஷக்ஞ்யா, ஸ்டைலான தோற்றத்தில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்டில் தற்...
கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட...
“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

“பெண்குயின் டூ ஜீப்ரா” – இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராகக் கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது ஜீப்ரா திரைப்படம். சென்னையில், பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். தயாரிப்பாளர் தினேஷ், "பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக் கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப் படம் செய்துள்ளேன். இந்தப் படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்திய...
கிளாடியேட்டர் II விமர்சனம்

கிளாடியேட்டர் II விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் கவிதையைச் சொல்லி, அவரைப் போலவே களத்தில் வாளைச் சொருகி, மண்ணை எடுத்து கைகளில் தடவிக் கொள்ளும் ஹேனோ தான், தனக்கும் மேக்ஸிமஸ்க்கும் பிறந்த மகன் லூசியஸ் வெரஸ் அரிலியஸ் என லூசிலாவிற்குத் தெரிந்து விடுகிறது. அதன் பின் ஏற்படும், தாய் – மகன் பாசப்ப...
நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

அயல் சினிமா
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும், அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது....
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு 'லவ் அண்ட் வார்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் 'ஹிட் : மூன்றாவது வழக்கு' ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. 'நேச்சுரல் ஸ்டார்' நானி தனது 32 ஆவது படமாக 'ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)' எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்தத் திரைப்படத்தில் அபாயகரமான ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் கதாபாத்திரம் பற்றிய ஒரு ப்ரோமோ அசைவொளி வெளியாகியிருந்தது. தற்போது அப்படத்தின் படப்படிப்பு தைதராபாதில் தொடங்கியுள்ளது. அதில் நானி கலந்து...
ARM விமர்சனம்

ARM விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன. காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் பழிவாங்கும்விதமாக அவ்விளக்கைக் கவருகிறார் மணியன். சாதிய அடுக்குமுறையில் இருந்தும், திருடனின் ரத்தம் என்ற ஏளனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள, அவ்விளக்கை மீட்கிறார் அஜயன். கேலுவான டோவினோ தாமஸ்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்குமான காதல் எட்டாக்கனியாக உள்ளது. ஊராரிடம் பெரும் பெயரைச் சம்பாதித்தாலும், இவரது வாழ்க்கை ஒரு துயர காவியம். திருடன் மணியனா...
சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்

சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்

அயல் சினிமா
சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்திருந்தார்.விஜயவாடாவைப் பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, சாய் துர்கா தேஜ் தனது துர்கா அம்மா இல்லத்தைப் பார்வையிட்டு, முதியோர்களின் நலனை விசாரித்தார். அவர் அம்மா அறக்கட்டளைக்கு, இரண்டு லட்ச...
ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

அயல் சினிமா
பிரபல வில்லன் நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில் சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போ...
Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

அயல் சினிமா
கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது. இந்நிகழ்வில் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் சமூகத்தில் நிலவும் வர்க்கத்தையும், மனித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையில...
அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

அயல் சினிமா
நந்தமூரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமூரி தாரக ராமராவின் பேரனும், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமூரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.மோக்ஷக்யாவை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த, பாலகிருஷ்ணாவும் அவரது குடும்பத்த...