Shadow

சினிமா

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே மன்னனாக இருந்து மக்களை ஆட்சி செய்கிறார்கள். ஒசிரிஸ் எனும் எகிப்தின் மன்னன், காற்றுக் கடவுளான தன் மகன் ஹோரஸுக்கு முடிசூட்ட, விழா ஏற்பாடு செய்கிறார். அங்கே வரும் ஹோரஸின் சிற்றப்பாவான பாலைவனங்களுக்குப் பொறுப்பேற்கும் இருள் கடவுள் செத், தன் அண்ணனான ஒசிரஸைக் கொல்வதோடு ஹோரஸின் இரண்டு கண்களையும் பிடுங்கிக் கொள்கிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தில் தோன்றும் கடவுள்களின் சராசரி உயரம் 9 அடி. ஆவேசமாகிச் சண்டையிடும் தருணங்களில் 12 அடிக்கு விஸ்வரூபமெடுப்பார்கள். கடவுள்கள் தான் எனினும் அவர்களுக்கும் மரணம் உண்டு. இருள் கடவுள் செத் எதிர்பார்ப்பதோ மரணமின்மையையோடு தீர்க்க ஆயுசாக நைல் நதி பாயும் எகிப்தை ஆள்வது. அவரது தந்தையான சூரிய கடவுள் “ரா”-வோ, தனக்குப் பிறகு பூமியை விழுங்க நினைக்கும் அபோஃபிஸ் எனும் ராட்சஷ ஜந்துவுடன் தினமும் போ...
பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

சினிமா, திரைத் துளி
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி. “இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது. மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்ச...
நையப்புடை விமர்சனம்

நையப்புடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. 'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி. நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சான்...
சவாரி – படக்குழுவினர்

சவாரி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> பெனிட்டோ ஃப்ராங்களின் >> சனம் ஷெட்டி >> கார்த்திக் யோகி >> மதிவாணன் >> T.M.கார்த்திக் >> அருண் அலெக்சாண்டர் >> பாண்டியன் >> முனிஷ்காந்த் >> கவிதாலயா கிருஷ்ணா >> ‘லொள்ளு சபா’ ஈஸ்டர்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – எண்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் >> இயக்கம் – குகன் சென்னியப்பன் >> ஒளிப்பதிவு – செழியன் >> படத்தொகுப்பு – T.E.கிஷோர் >> இசை – விஷால் சந்திரசேகர் >> கலை – சதிஷ் குமார் >> பாடல் – சாருகேஷ் சேகர் >> சண்டை – மிரட்டல் செல்வா >> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா...
கடத்தப்படும் பஸ் 657.!

கடத்தப்படும் பஸ் 657.!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்தைக் கடத்தினால் என்ன நடக்கும் என்பதை ஸ்பீட் (Speed) மற்றும் ஸ்பீட் – 2 (Speed - 2) படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தைக் கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான் பஸ் 657 படத்தின் சாரம். மிகச் சிறந்த கிளாஸிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி டார்னமென்ட் (The Tournament) என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மான், இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டீஃபன் சைரஸ் செஃபர் மற்றும் மேக்ஸ் ஆடம்ஸ், இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மனைவியை இழந்த சூழலில், தனது ஒரே மகளை வளர்த்திட அரும்பாடு படுகிறார் லூக் வான். நோய்வாய்பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது லூக்கிற்...
அகிலன்

அகிலன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியொன்றும் அப்போது வசதியாக இருக்கவில்லை. மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரத...
சேதுபதி விமர்சனம்

சேதுபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்' என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ். அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார். வாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு, த...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...
ஸ்பாட்லைட் விமர்சனம்

ஸ்பாட்லைட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வலுவான அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பல வருடங்களாக கார்டினல் லா மூடி மறைத்த பாதிரியார்களின் தகாச் செயல்களை, நான்கு பேர் கொண்ட புலனாய்வுப் பத்திரிக்கைக் குழு எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை. ‘பாஸ்டன் க்ளோப்’ நாளிதழுக்கு புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் மார்ட்டின் பேரோன். பத்தி (column) செய்தியாக வந்த ஒன்றை, புலனாய்வு செய்யும்படி ஸ்பாட்லைட் ஆசிரியர் வால்டர் ராபின்சனிடம் கேட்டுக் கொள்கிறார் பேரோன். சிறார்களுக்கு பாலியல் தொந்தரவுகளைத் தொடர்ந்து அளித்து வந்த பாதிரியார் ஜான் கீகனின் செயற்பாடுகள் பற்றி கார்டினல் லா எனும் தலைமை பிஷப்-க்குத் தெரிந்தும், அதைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் அந்தப் பத்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த வக்கீல் கரபேடியனைப் பேட்டிக்காக அணுகுகின்றனர். வக்கீல் மிட்செல் கரபேடியன் மிகவும் ...