Shadow

சினிமா

மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

சினிமா, திரைத் துளி
ஸ்ரீமந்த்துடு என்ற தெலுங்குப் படம் நேரடியாகத் தமிழிலும் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வந்தன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். வெள்ளியன்று இப்படம் வெளிவரவுள்ளது. “தமிழ் ரசிகர்களிடம் ஒரு விஷயம் பிடிக்கும். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, சின்ன படம், பெரியப் படம் என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. நல்ல படங்களை ஒட வைப்பாங்க” என்றார் ஜெகபதி பாபு. மேலும், “நானும், மகேஷ் பாபுவும் சென்னையில் இருந்தவங்கதான். அங்க போய் நடிகர்கள் ஆயிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் அப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். “ஒரு எமோஷனலான சீன்ல ஹீரோஸ்லாம் பொதுவா ஆ..ஊ..ன்னு கத்துவாங்க. ஆனா மகேஷ் பாபு ஒரு லுக்தான் விடுவார். இதை எங்கிருந்து பிடிச்சார்னு தெரில? ஒருவேளை அவர் வொர்க் பண்ண ஆரம்பக் கால டைரக்டர்கள...
இளங்கோவன்

இளங்கோவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த முதல் வசன கர்த்தா இளங்கோவன். இவர் 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். சிலகாலம் 'தினமணி' பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். பி.யூ.சின்னப்பா நடித்த 'கண்ணகி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம்.கே.டி.பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு விசேஷத் திறமை படைத்தவர். திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச் சொல்ல முடியும். 1937இல் ஆரம்பித்த இவரது பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார் 30 திரைப...
எது சமுதாயப் பிணி?

எது சமுதாயப் பிணி?

சினிமா, திரைத் துளி
மோர்ணா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பரத் துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இவர் தற்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது. 'என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்தப் பாத்திரத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்கப் போவது யாரென்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையைச் சொல்லி முடித்ததும் தீர்மானமாகச் சொன்னார் ' நீ தான் என்று'. சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு...
ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்

ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் குறைவான நீளம் கொண்ட படம். குத்துப் பாட்டுகளோ, சண்டைக் காட்சிகளோ இல்லாத படம். தனிமையில் வாடும் முதியவரான கைலாசம், தனக்கு நெஞ்சு வலியென 108 சேவைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கிறார். கைலாசத்திடம் மாட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரும் இ.எம்.டி. (Emergemcy Medical Technician) சத்யாவும் படும்பாடுதான் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை. விஜய் சேதுபதியின் அறிமுகத்துக்குப் பின் படம் கலகலக்கத் தொடங்குகிறது. ஆனால் படம் தொடங்கிய நாற்பதே நிமிடங்களுக்குள், படத்துள் ரசிகர்கள் ஆழத் தொடங்கும் முன்பாகவே இடைவெளி வந்துவிடுகிறது. ஏன்? எதற்கு? என்ன கதை? என்ற நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின் அசலான படம் தொடங்குகிறது. அதன் பின்னும் படத்தில் கதை எனப் பெரிதாகக் கிடையாது. உயிருடன் இருக்கும்போது தன் தந்தையின் அருமையை உணராமல் போய்விட்டோமே என மனக் கிலேசத்தில் உழலும் சத்யாவுக்கு, ...
பிரபு தேவா ஸ்டுடியோஸ்

பிரபு தேவா ஸ்டுடியோஸ்

சினிமா, திரைத் துளி
நடனம், நடிப்பு, இயக்கத்தினைத் தொடர்ந்து தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளார் பிரபுதேவா. “சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்த்திரையுலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த அனுபவமுடைய பலரைக் கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாகச் செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்'" எனக் கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா....
பிள்ளை இல்லா தாய்

பிள்ளை இல்லா தாய்

சினிமா, திரைத் துளி
டெய்சி எனத் தலைப்பிடப்பட்ட படத்துக்கு உனக்கென்ன வேணும் சொல்லு என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. "அனைவருக்கும் பரீட்சயமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பு, படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். குழந்தை பெற இயலாத ஒரு படித்த இளம் பெண்ணை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதால் அவள் படும் வேதனையும், வலியையும் அமானுஷ்ய சக்திகளின் பின் புலத்தில் கூறியுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது. படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார் ‘உனக்கென்ன வேணும் சொல்லு (டெய்சி)’இயக்குநர் ஸ்ர...
மினியன்ஸ் விமர்சனம்

மினியன்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.! அதற்காக அவர்கள் அணுகாத வில்லன்கள் இல்லை. நம்மை ஜுராசிக் வேர்ல்டில் அச்சுறுத்திய டைனோசரான டி-ரெக்ஸ் முதல் செங்கிஸ் கான், டிராகுலா என எண்ணற்ற வில்லன்களை நோக்குகின்றனர். என்ன சாபமோ தெரியவில்லை, தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களையே ஒவ்வொரு முறையும் ஒரு விபத்தில் மினியன்ஸே கொன்று விடுகிறார்கள். மனம் வெறுத்து, லட்சியம் நிற...
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு. 1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த 'நவசக்தி' பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930இல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932இல் விடுதலையாகி வந்த பின், எஸ்.எஸ்.வாசனின...
திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளி வருகிறது. இது ஒரு முழுநீள காமெடி திரைப்படமாகும். மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி  வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் உள்ளது தயாரிப்புத் தரப்பு. அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் ஆகியோர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....
கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ' சவாலே சமாளி' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கிறார். ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் உள்ள தனது கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறுக் கூறினார்.  “ஒரு படத்திற்கு கதையே பிரதானம் என்று திண்ணமாய் நம்புபவன் நான். நான் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் சீரியஸ் டைப் தான். ஒரு கமர்ஷியல் படத்தில் என்னால் ஈடு செய்ய முடியுமா என்று சந்தேகம் என்னுள் எப்பவும் இருந்தது. அதே நேரத்தில் தான் 'கழுகு' இயக்குநர் சத்யா சிவாவையும், தயாரிப்பாளர் அருண் பாண்டியனையும் சந்திக்க நேர்ந்தது. அருண் பாண்டியன் சார் தயாரிக்க, சத்யசிவா இயக்க உருவாகும் 'சவாலே சமாளி' ப...
டெஸ்பிக்கபிள் மீ 2

டெஸ்பிக்கபிள் மீ 2

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, 'பாம்பின் கால் பாம்பறியும்' எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு. அந்த பிரகஸ்பதியின் பெயர் எல்...
கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கருணாகரன் >> ராஜேந்திரன் >> பார்வதி நாயர் >> ஆனந்த் ராஜ் >> மனோ பாலா >> மதிவாணன்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு – S. சுப்பையா >> நிர்வாகத் தயாரிப்பாளர் – P. ராஜ்குமார் (எ) ராக்கி >> தயாரிப்பு நிர்வாகி – D. முருகன் >> இயக்குநர் – குகன் சென்னியப்பன் >> இசை – சுந்தர மூர்த்தி >> ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி >> படத்தொகுப்பு – கிருபாகரன் புருஷோத்தமன் >> கலை – சதிஷ்குமார் நாராயணன் >> சண்டை – “மிரட்டல்” சிவா >> உடை வடிவமைப்பாளர் – ஜேம்ஸ் ஆபிரகாம் >> மக்கள் தொடர்பு – நிகில்...
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். 'இந்திர மோகனா' என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் 'வைதேகி'. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் ...