Shadow

சினிமா

தனி ஒருவன் விமர்சனம்

தனி ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை. ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம். சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத...
பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. 'தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்' என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது. தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் ...
வண்ண ஜிகினா விமர்சனம்

வண்ண ஜிகினா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை. கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது போன்ற ரியாக்ஷனுடன் படம் நெடுகே பொருந்தாமல் வருகிறார் ஆன்சன் பால். படம் எதைப் பற்றிப் பேச விழைகிறதோ, அதற்கு எதிர் திசையில் சென்று முடிகிறது. ஆனால் சுபமாய் முடிவது ஆறுதலான விஷயம். ‘கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர்’ என்பதுதான் படம் சொல்ல வ...
வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு. கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது. வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் திரிபைக் கணக்கில் எடுக்காமல், படத்தின் கதையை சக்தி கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புதினமாகப் பாவித்தால் படம் மகத்தான காவியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன், ஆயிரத்தின் ஒருவன் போல் இப்படம் தொடக்கம் முதல் கடைசி வரை ஈர்க்கவில்லை. காரணம், படம் ஒற்றை கருவை நோக்கமாகக் கொண்டு பயணிக்...
ஐ ஆம் ஜிகினா.!

ஐ ஆம் ஜிகினா.!

சினிமா, திரைத் துளி
கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். இதைக் குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரைக் கவர நினைக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றியக் கதை தான் ஜிகினா. 'ஜிகினா' திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதே எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்கு சாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல. என்னுடையக் கதா பாத்திரத்தை இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்துள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்களிடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கையோடு இருக்கிறேன். வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதாப்பாத்திரம் மிகப்...
செல்வந்தன் விமர்சனம்

செல்வந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது. கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை. ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும்போது கூட அவர் முகத்தில் உக்கிரம் காணப்படுவதில்லை. அடியாட்கள் பவனி வர மாந்தோப்புக்குள் அவர் சைக்கிளில் நுழையும் காட்சி செம மாஸ். கோடீஸ்வரரின் மகனாகக் கச்சிதமாக கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். தன் கிராமத்து மீது மிகவும் அபிமானமுள்ள சாருவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிகவும் அழக...
வாலு விமர்சனம்

வாலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருமென விளம்பரப்படுத்தப்பட்ட வாலு படம், ஆயிரம் சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக வெளி வந்தேவிட்டது. காதல் என்றாலே டார்ச்சர் என நினைக்கும் ஷார்ப்க்கு (நாயகனின் பெயர்), ப்ரியா மகாலட்சுமி மீது காதல் மலர்கிறது. முறை மாமனுடன் ப்ரியா மகாலட்சுமிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், ஷார்ப் எப்படி தன் காதலை வெளிப்படுத்தி ப்ரியாவை சம்மதிக்க வைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவை, காதல், அப்பா செண்ட்டிமென்ட், தங்கச்சி செண்ட்டிமென்ட், இடையிடையே ஆக்ஷன் என கலந்து கட்டியடித்துள்ளார் சிம்பு. இயக்குநர் விஜய் சந்தரின் இந்தக் கதையை விரும்பி, சிம்பு தாமாகவே முன் வந்து இப்படத்தில் நடித்துள்ளார். ஜாலியாப் போகிறது முதற்பாதி. இரண்டாம் பாதியில், ‘நான் ஏன் இப்படிச் சொன்னேனா?’ என எதற்கெடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ்-கட் போட்டு, ஒவ்வொரு வசனத்துக்கும் முன் நடந்தது என்ன என்ற ரீதி...
முதல் இந்திய நடிகர்

முதல் இந்திய நடிகர்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலராலும் நடிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இனிய சுத...
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது 25வது படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் ஆர்யா. அது, பாஸ் (எ) பாஸ்கரன் போன்றதொரு வெற்றிப் படமாக இருக்கவேண்டுமென விரும்பி மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார் ஆர்யா. வாசுவும் சரவணனும் ஒன்றாகப் படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே வளர்ந்து தொழில் செய்யும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்களின் மனைவிகளுக்கோ தங்கள் கணவரின் நண்பரைப் பிடிக்காமல் போய் விடுகிறது. நண்பனா? மனைவியா? என்ற இக்கட்டில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. ராஜேஷ் மீண்டும் சந்தானத்தை முழுக்க முழுக்க நம்பி களமிறங்கியுள்ளார். இரண்டு நண்பர்கள், அதிலொரு நண்பனுக்கு “ஆழகான வெள்ளை நிற பெண்” மீது கண்டதும் காதல் வந்து, அவள் பின்னாலே சுற்றுவதென ராஜேஷ் தனக்கு மிகவும் பிடித்த கதையை விடாமல் இம்முறையும் பற்றிக் கொண்டுள்ளார். இம்முறை சந்தானமே படாதபாடுப்பட்டே ராஜேஷைக் காப்பாற்ற முயல...
பி. எஸ். ராமையா

பி. எஸ். ராமையா

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வத்தலகுண்டு: இந்த ஊர் முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்தது. இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. வத்தலகுண்டு என்பதை ஆங்கிலத்தில் பத்லகுண்டு என்பார்கள். இந்த பத்லகுண்டு ஊரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்த ஊர் ஆத்தூர் என்கிற கிராமம். இந்த ஊரைச் சார்ந்த சுப்ரமணிய அய்யரின் மகன்களில் ஒருவர் ராமையா. சுப்ரமணிய அய்யர் பிழைப்புக்காக வந்து சேர்ந்த ஊர் பத்லகுண்டு. எனவே பத்லகுண்டு நாளடைவில் இவர்களுக்கு சொந்த ஊராக மாறியது. எனவே ராமையாவுக்கு பத்லகுண்டு சுப்ரமணிய ராமையா என்கிற பெயர் நிலைத்து பின்பு சுருங்கி பி.எஸ்.ராமையாவாக மாறியது. மிகவும் ஏழ்மையான குடும்பம். வத்தலக்குண்டுவில் மூன்றாவது ஃபாரம் (8ம் வகுப்பு) வரை தான் படிக்க முடிந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்தவர் ராமையா. வறுமை கொடூரமாகத் தாக்கியது. பிழைப்பைத் தேடி தனது 16வது வயதில் மதராஸ் வந்து சேர்ந்தார். 1921இல் மதராஸ் ப...
தொலை தூரத்தில் அழும் குழந்தை

தொலை தூரத்தில் அழும் குழந்தை

சினிமா, திரைத் துளி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு. இணையதளங்களில் டீஸர் மூலம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ள 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜாக்குலின். ''இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைபடாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவா...
வந்தா மல விமர்சனம்

வந்தா மல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாரோ ஒருவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினால், இரண்டு கோடி ரூபாய் கிடைக்குமென செயின் திருட்டில் ஈடுபடும் நான்கு நண்பர்களுக்குத் தெரிய வருகிறது. அந்த முயற்சியில், செயின் திருடர்களுக்குக் கிடைத்தது மலையா முடியா என்பதுதான் படத்தின் கதை. ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தெந்த விஷயத்திற்காகவெல்லாம் மனநலம் பாதிக்கப்படும்? இந்தப் படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உண்டு. ‘புகை பிடிக்க அரசு தடை விதித்ததால், புகை பிடிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ இளங்கோவாக வருகிறார் மகாநதி ஷங்கர். இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் படம் நெடுகும் ஈர்க்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அதிகாரியுடன் இருந்தும், நண்பர்களுக்காகப் பரிந்து பேசியும் அவஸ்தைப்படும் கான்ஸ்டபிள் பெருமாளாக கவனிக்க வைக்கிறார் செளகத். ‘கலாபக் காதலன்’ இயக்கிய இயக்குநர் இகோரின் கதாப்பாத்திரத் தேர்வுகள் அனைத்துமே கச்சிதமாக இர...
சண்டி வீரன் விமர்சனம்

சண்டி வீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம். ஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை. சிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் ஈர்க்கத் தவறுவதால், படத்தில் ஒன்ற சிரமமாய் இருக்கிறது. கவுன்சிலராகவும், நாயகியின் தந்தையாகவும் லால் நடித்துள்ளார். போலிஸ் ஜீப்பை தண்ணிக்குள் தள்ளிவிட்டு, காவல்துறை அதிகாரியை எச்சரிக்கும் அளவு மிக வலுவான கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார். க்ளைமேக்ஸில் அந்த சித்தரிப்பு அவ...