Shadow

சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 1

டெஸ்பிக்கபிள் மீ 1

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை ஊசியால் குத்தி மகிழ்வார். இதுதான் க்ரூ. க்ரூவின் ஒரே லட்சியம், உலகின் ஈடியிணையற்ற வில்லன் எனப் பெயரெடுப்பதுதான். ஆனால், ‘வெக்டர்’ என்பவன் எகிப்தின் பெரிய பிரமிடான கிசாவைத் திருடி விடுகிறான். அதைக் காரணம் காட்டி, ‘எவில் வங்கி (Bank of Evil)’-இல் நமது நாயகரான க்ரூவுக்கு லோன் தர மறுக்கின்றனர். என...
பாகுபலி விமர்சனம்

பாகுபலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
(பாகுபலி - தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம். பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர...
பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

சினிமா, திரைத் துளி
படத்தின் வெற்றியைக் கொண்டாட, படக்குழுவினர் அனைவரும் அந்தந்தப் பாத்திரத்தின் உடையலங்காரத்துடனே மேடையேறினர். அது மட்டுமல்லாமல், சுலைமான் பாய் டீக்கடை - ராணி இல்லம் – காவல் நிலையம் என மேடையின் செட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தியிருந்தனர். ‘வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் இப்படியொரு படம், எங்களுக்கும் மனத் திருப்தியை அளித்து ரசிகர்களுக்கும் மனத் திருப்தியை அளித்த இப்படம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்’ என கமல் சொன்னதுபோல், பாபநாசம் படத்தின் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தவாறு ஊடகத்திற்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். பாபநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம், "யார் சிறப்பாக நடித்திருந்தனர்? த்ரிஷ்யத்தின் ஜார்ஜ் குட்டியா? பாபநாசத்தின் கமலா!?" எனக் கேட்டதற்கு, "இருவரும் தனக்கே உரிய ஸ்டைலில் அந்த பாத்திரத்தை நடித்திருந்தனர். இருவரும் தன் திறமைகளை நிரூபித்தவர்கள். இந்திய அளவி...
36 முத்தங்களின் பின்னணி.!

36 முத்தங்களின் பின்னணி.!

சினிமா, திரைத் துளி
டீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினாராம் ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்பட்டது. “டீஸரைப் பார்த்துட்டு அனைவரும் கேட்டது, ‘ஏன் ஒரு நல்ல பையனை இப்படியாக்கி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் ஒன்னும் செய்யலை. அவரது இயல்பே அப்படித்தான். வெளில யாருக்கும் அது தெரில. சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. இப்ப இருக்கிற லவ்வுன்னா என்ன? அதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தனது ஃப்ரீ ஜோனில் இருந்து நடிச்சிருக்கார் ஜி.வி. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான படம். ஒவ்வொரு பொண்ணும், பையனும் படத்தோட தன்னைப் பொருத்திப் பார்த்துப்பாங்க. படத்தின் முதல் பாதி எழுதி முடிச்சதுமே, இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிக் கேட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ பென்சில் டார்லிங் படம்லாம் ஸ்டார்ட் பணவே இல்லை. ‘என்னடா சொல்றா நீ?’ன்னு கேட்டார். அப்புறம் அவரது டார்லிங் படமும் ரிலீஸ் ஆகிடுச்சு. ...
கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

சினிமா, திரைத் துளி
“த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம். இன்னும் சரியா சொல்லணும்னா, கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி இது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரம் தன் சொந்த வாழ்க்கையில் பண்ண லவ், காதல் கேட்ட லவ்வெல்லாம் வச்சு கற்பனை கலந்து கதையாக்கியிருக்கார். இப்பயிருக்கிற யூத் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறாப்ல படம் எடுத்திருக்கார்” என்றார் படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் C.J.ஜெயகுமார். படத்தை வழங்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா, “படம் தர லோக்கல்! இதுக்குன்னு இருக்கிற ஆடியன்ஸ்க்கு படம் வந்து நாளாச்சு” என ஜி.வி.பிரகாஷின் படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமையைப் பாராட்டினார். “ஜி.வி.க்கு எந்த கதாப்பாத்திரமாவும் மாறி நடிக்கிற திறமை இருக்கு. நல்ல டைமிங் சென்ஸ் இருக்கு. ம்யூஸிக் போலவே நடிப்பிலும் கலக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட். ஏன்னா.. அரை டஜன் படம் பண்றோம்; அதுல நமக்கே தெரி...
பாபநாசம் விமர்சனம்

பாபநாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் குடும்பத்தை உலகமாக நினைத்து வாழுபவர் அண்ணாச்சி சுயம்புலிங்கம். அந்த சின்னஞ்சிறு உலகத்தில், அழையாத விருந்தாளி ஒருவரால் சிக்கலொன்று ஏற்படுகிறது. அச்சிக்கலால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்படி சுயம்புலிங்கம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. படத்தின் முதற்பாதி, அதன் மூலமான மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆர்ப்பட்டமில்லாத காட்சிகளாய் நகர்கின்றன. அதை கலகலப்பாக்குவது எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களே. அங்காடித் தெரு படத்துக்குப் பின், இப்படத்திற்கே கைதட்டல்களைப் பெறுகின்றன அவரின் வசனங்கள். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புக்கு உதவிய எழுத்தாளர் சுகாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யத்தின் ஜோர்ஜ் குட்டி முகத்தில் எந்த பாவனையும் காட்டாதவர்; மன்னிப்பைக் கூட, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கலங்காமல் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் கை கட்டிக் கேட்பவர். மாறாக பாபநாசத்தின் ஒட்டு மீசை ...
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

சினிமா, திரைத் துளி
டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் - திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான க...
ஜே.ஆர். ரங்கராஜு

ஜே.ஆர். ரங்கராஜு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்' என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே 'ராஜாம்பாள்' என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.  கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் 'மோசம் போனேன் கோபாலா' என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிக...