Shadow

சினிமா

கமரகட்டு விமர்சனம்

கமரகட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தான் கற்ற மொத்த வித்தையும் இறக்குவது என்றால் என்ன? அதைத் தெரிந்து கொள்ள அவசியம் நீங்க கமரகட்டு பார்க்கவேண்டும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் ராம்கி ராமகிருஷ்ணன் ஆவார். திருவண்ணாமலையில் பன்னிரெண்டாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் படிக்கும் இரண்டு மாணவிகளைக் காதலிக்கிறார்கள். கல்லூரி போன முதல் நாளே காசு, பணம், துட்டு, நகை, சொத்து என வேறிருவரை அம்மாணவிகள் காதலிக்கத் தொடங்குகின்றனர். வெகுண்டெழும் 12வது தேறாத அம்மாணவர்கள், காதலியின் (மாணவிகள் இருவரும் சகோதரிகள்) தாயிடம் நியாயம் கேட்கின்றனர். அந்தம்மாவும், ‘எவ்ளோ நல்ல பசங்களா இருக்கீங்க?’ என அடுத்த நாளே ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்து கல்யாணம் செய்ய வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குகிறார். பசங்க செம ஹேப்பியாகி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டான கமரகட்டை காதலியின் அம்மாவுக்குத் தர...
திறந்திடு சீசே விமர்சனம்

திறந்திடு சீசே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குள் இருக்கும் பூதத்தை, ‘திறந்திடு சீசே’ என பாட்டிலை ஓப்பன் செய்து விழிக்க வைத்துவிடுகிறான் மனிதன். அப்படி ஒருவனுக்குள் விழித்துக் கொள்ளும் பூதத்தால், அவனைச் சுற்றியிருப்பவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது படம். பப்-க்கு (Pub) வரும் சார்மி, பாத்ரூமில் வைத்து வன்புணர்வு செய்யப்படுகிறார். போதையில் இருந்த அவருக்கு வன்புணர்ந்தது யாரெனத் தெரியவில்லை. ஆனால், பார் அட்டெண்டர்களான ஜான் மற்றும் ஹூசைன் இருவரில் ஒருவர்தான் என உறுதியாகத் தெரிகிறது. யார் வன்புணர்ந்ததென சார்மி கண்டுபிடிப்பதுதான் படத்தின் முடிவு. ஹூசைனாக நடித்திருக்கும் நாராயணன் கலக்கியுள்ளார். படம், ஓரிரவு ஒரு பப்-க்குள் நடக்கும்படியான கதையைக் கொண்டது. ஆனால், ஒரே லோக்கேஷன் என்ற அலுப்புத் தெரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்புத்தான். எல்லையை மீற விருப்பம் கொண்ட, ஆனாலும் அதற்கான போத...
பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

சினிமா, திரைச் செய்தி
“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. குடி பழக்கம், பாலியல் வன்கொடு...
தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

சினிமா, திரைத் துளி
சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தமிழின் முதல் பீரியட் படமான ஜாக்சன் துரையில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜக்கேரி அறிமுகமாகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ், எம்.எஸ்.சரவணன் இன்று துவக்கினார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சுரிங் (CONJURING) படத்தின் ஒப்பனைத் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது. தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக் கொள்கிறார். கலை T.N. கபிலன், நிர்வாகத் தயாரிப்பாளர் அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், தயாரிப்புக் கட்டுப்பாடு M.பூமதி, லைன் ப்ரொட்யூஸர் செல்வா, தய...
இனிது இனிது டைசன்

இனிது இனிது டைசன்

சினிமா, திரைத் துளி
தெலுங்கு படமான ‘ஹேப்பி டேஸ்’ ரீமேக்கான ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமானவர் நாராயணன். அந்தப் படத்தின் இணை ஒளிப்பதிவாளர்தான் நிமேஷ் வர்ஷன் இயக்கும் ‘திறந்திடும் சீசே’ படத்துக்கு நாராயணனைப் பரிந்துரைத்துள்ளார். சி.எஸ்.கே. படத்தில் வில்லனாக நாராயணன் கலக்கியிருந்தது நினைவிருக்கலாம். “நிமேஷைப் பார்த்த போது, அவர் கதையை விவரித்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்ஷிகா, வீரவன் ஸ்டாலின் மற்றும் எனக்கு இடையில் நடக்கும் முக்கோண த்ரில்லர் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல் என்றார். அந்தக் கதாபாத்திரம், சீரியசாகவும் நகைச்சுவையாகவும் மாறும். அந்தச் சவாலான பாத்திரம் என் நடிப்புத் திறமையைக் காட்ட வாய்ப்பாக அமையும்னு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான எம்.ஜி.ஆர்., அலிபாபா படத்தில் சொல்லும் வசனம்தான் படத்தின் தலைப்பு. இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருங்கிய ப...
மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா தனது பட நாயகன்களின் முகத்தை உருமாற்றுவதுபோல், சார்லைஸ் தெரான் இப்படத்திற்காக கனக் கச்சிதமாக உருமாறியுள்ளார். ஃப்யூரியோஸாவாக தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக, மொட்டையடித்துக் கொண்டு இயக்குநருக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இப்படம், ஒரு சூப்பர் ஹீரோயின் படம். நாயகனின் பங்கு ...
புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்டன...
உப்பு கருவாடு தயார்

உப்பு கருவாடு தயார்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி ஃபிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். “தேர்ந்த பல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஓர் அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பும் படத்தைக் குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் சுவைக்கலாம்” என மகிழ்ச்சியுடன் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்....
இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வரும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்கள் போலின்றி இம்முறை நகைச்சுவைக்கு மாறியுள்ளார். வக்கீல்களான கார்த்திக்கும் மெல்லினாவும் ஒரே வீட்டில் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். எலியும் பூனையுமாக எதிரெதிர் துருவமாக நிற்கும் இவ்விருவரைக் குறிப்பிடத்தான் தலைப்பை இந்தியா பாகிஸ்தான் என வைத்துள்ளனர். படத்தில் காட்டமுத்துவான பசுபதி அறிமுகமானதும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பசுபதி வரும் அனைத்துக் காட்சிகளுமே திரையரங்கு கலகலப்பாகிறது. முக்கியமாக, பத்து பேரை ஓடவிட்டு வெட்டி, ‘டெமோ’ செய்து காட்டும் காட்சியைச் சொல்லவேண்டும். அவரது எதிரணியில் மருதுவாக எம்.எஸ்.பாஸ்கரும், இடிச்சபுளியாக மனோபாலாவும் வருகின்றனர். ஆத்தாவின் அனுமதிக்காக சின் முத்திரை பிடித்து சிலையாகும் மருதுவுக்கு எப்படி எல்லாம் ஆத்தாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது என்பவை ரசிக்க வைக்கிறது. தீனா தேவராஜனின் இச...
சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

சினிமா, திரைத் துளி
ஜின் - ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்படும் படம். சாதாரணமான ஐந்து நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் ஓர் அசாதாரணமான அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம். ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தைப் பற்றி இளம் அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், 'முண்டாசுப்பட்டி' முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வைச் சுற்றி அமைந்ததே ‘ஜின்’. எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டிருந்த அந்தக் கட்டடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது. எனக்கு இந்தப் படத்த...
ஜின் – படக்குழுவினர்

ஜின் – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கலையரசன் >> மெட்ராஸ் ஹரி >> காளி வெங்கட் >> அர்ஜுனன் >> 'முண்டாசுப்பட்டி' முனீஸ் காந்த் >> ப்ரீத்திபணிக்குழு:>> தயாரிப்பு - ரைட் மீடியா ஒர்க்ஸ் & சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் >> இயக்கம் - சதீஷ் சந்திரசேகரன் >> ஒளிப்பதிவு- விஜய் கார்த்திக் கண்ணன் >> படத்தொகுப்பு – மதன் >> இசை – ராதன் >> கலை - ரமேஷ் >> சண்டை – பில்லா ஜகன் >> பாடல் - முத்தமிழ் >> நடனம் – சுஜெய் ஸ்ரீநிவாஸ் & அனுஷா...
இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை

இயக்குநர் சுசீந்திரனின் வீர தீர சூரன் கதை

சினிமா, திரைத் துளி
இயக்குநர் சுசீந்திரனின் கதையமைப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ எனும் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், கேத்ரின் தெரஸா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கிறார். இப்படத்தை N.ஷங்கர் தயாள் இயக்குகிறார்.  “ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதேச்சையாக சுசீந்திரனிடமிருந்து, இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்து போனேன். மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ ‘வீர தீர சூரன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைய, மே மாத மத்தியில் முதல் கட்டப் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது” எனக் கூறினார் தயாரிப்பாளர் AVR புரொடக்ஷன்ஸ் V.R.அன்புவேல் ராஜன். தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவ...