சினிமாசைவம் விமர்சனம்
சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. […]















