Shadow

திரைச் செய்தி

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் நானியின் அமைதிபூர்வமான தோற்றம் வெளியீடு

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் நானியின் அமைதிபூர்வமான தோற்றம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது 'நேச்சுரல் ஸ்டார்' நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பை...
பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ தமிழிலும்  வசூல் சாதனை படைத்திருக்கிறது

பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ தமிழிலும் வசூல் சாதனை படைத்திருக்கிறது

சினிமா, திரைச் செய்தி
 பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இ...
இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இந்தியன் 2: கனவு நிஜமாகியுள்ளது | கமல்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் கமல்ஹாசன், "இந்த வயதில் இப்படம் செய்யும் ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லாக் கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய...
“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

“இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு” – இயக்குநர் ஷங்கர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” ஆகும். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.நடிகர் சித்தார்த், "இது மிகப் பெரிய மேடை கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும் அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை. 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும் இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்றி...
லண்டன் நேஷனல் ஃப்லிம் அகாடமி விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்”

லண்டன் நேஷனல் ஃப்லிம் அகாடமி விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது!10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர...
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஜமா’

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஜமா’

சினிமா, திரைச் செய்தி
இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் 'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா'!பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் ...
டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!

டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!

சினிமா, திரைச் செய்தி
மார்வெல் ஸ்டுடியோஸ் 'டெட்பூல் & வால்வரின்' குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 'டெட்பூல் & வால்வரின்' நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை உற்சாகமாக சந்தித்துள்ளனர்.மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது...
ஜப்பானிலிருந்து கல்கியை காண வந்த பிரபாஸின் தீவிர ரசிகர்கள் குழு

ஜப்பானிலிருந்து கல்கியை காண வந்த பிரபாஸின் தீவிர ரசிகர்கள் குழு

சினிமா, திரைச் செய்தி
இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?பிரபாஸின் திரை தோன்றல் மற்றும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் துடிப்பான இளமையுடன் ஏற்று நடித்து, ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் உள்ள அவரது தெளிவான பார்வை... அவரை இந்த தேசத்தின் இதயத் துடிப்பாகவும், வெகுஜன மக்களின் அன்புக்குரியராகவும் மாற்றி இருக்கிறது. நேர்மை, உறுதி தன்மை, பேரார்வம்... ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற பிரபாஸ்.. திரையில் தோன்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக, அனைத்து நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து , உலகளாவிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கிறார்.பிரபாஸின் தீவிர ரசிகர் குழு அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகை தந்து அவரது சமீபத்திய திரைப்படமான 'கல்கி 2898 கிபி' படத்தை கண்டு களித்தனர். இது அனைவரின் மனதையும் கவர்ந்தது. எளிதில் யாராலும்...
பல்வேறு ஆஃபர்களுடன் ப்ரைம் டே ஸ்பெஷல் அட்டவணையை வெளியிட்டது அமேசான் ப்ரைம்

பல்வேறு ஆஃபர்களுடன் ப்ரைம் டே ஸ்பெஷல் அட்டவணையை வெளியிட்டது அமேசான் ப்ரைம்

சினிமா, திரைச் செய்தி
5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறதுஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும்.மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெரும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வ...
யோகி பாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் டீஸர் வெளியானது

யோகி பாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் டீஸர் வெளியானது

சினிமா, திரைச் செய்தி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !!இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது.இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான "அமுதா கஃபே" என்ற பாரம்பரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தரு...
சாராய மரணங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அப்புக்குட்டி பட டீஸர்

சாராய மரணங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அப்புக்குட்டி பட டீஸர்

சினிமா, திரைச் செய்தி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்" தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!https://www.youtube.com/watch?v=LURWfaiHNX0&t=6sதேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்', 'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு.இன்னொரு முக்கிய வேடத்...
வரவேற்பைப் பெற்று வரும் டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ

வரவேற்பைப் பெற்று வரும் டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ

சினிமா, திரைச் செய்தி
டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்‌ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ம...
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் புதிய படம் “U R NEXT”

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் புதிய படம் “U R NEXT”

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் ஷரீஃப் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. U R NEXTஇதில், கே.எஸ்.ரவிக்குமார், டிவி நடிகை ரக்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் திரைப்படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இதில...
ஆகஸ்ட் மாதம் “விடாமுயற்சி’ படப்பிடிப்புப் பணிகள் முடிவடையும்

ஆகஸ்ட் மாதம் “விடாமுயற்சி’ படப்பிடிப்புப் பணிகள் முடிவடையும்

சினிமா, திரைச் செய்தி
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர்.'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் - த்ரிஷா - ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரு...
தந்தையின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடும் நாயகனின் கதை “சீரன்”

தந்தையின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடும் நாயகனின் கதை “சீரன்”

சினிமா, திரைச் செய்தி
ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது !!ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார்.நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து...