Shadow

திரை விமர்சனம்

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா தியேட்டர்ல போய் சிரிச்சுட்டு வர படம்' என்கிறார் படத் தயாரிப்பாளராகியுள்ள சித்தார்த். அவரது நிறுவனத்தின் பெயர் 'ஏடாகி எண்டர்டைன்மெண்ட்'. ஒரு சரக்கினை சீனர்களிடம் ஒப்படைக்கும்படி, ஜில் - ஜங் - ஜக் ஆகிய மூவருக்கும் வேலையொன்று தரப்படுகிறது. அம்மூவரும் அந்த வேலையைச் சொதப்பாமல் செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை. ஜக் - ஜாகுவார் ஜகனாக சனந்த். டீசல் என்ஜின் போல் மெதுவாகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி, படத்தின் முடிவில் தன் நடிப்பால் ஜில்லையும் ஜங்கையும் ஓரங்கட்டி விடுகிறார் சனந்த். 'டிமான்ட்டி காலனி' படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஒரு பொருளைக் காட்டி, இதென்ன நிறமெனக் கேட்டால், அவர் கவிதையாக பதில் சொல்லும் விதம் கலக்கல். ஜங் - ஜங்குலிங்கமாக அவினாஷ் ரகுதேவன். படத்தில் இவரது வேலை "வாட்ச்" சு. சரக்கைக் குறித்த நேரத்தில் டெலி...
அஞ்சல விமர்சனம்

அஞ்சல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது. ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன். கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது. வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனிடம...
விசாரணை விமர்சனம்

விசாரணை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் - நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது. நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் - ஜாதி, இன, மத, மொழி, "வர்க்கம்" என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும்; யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும். தன் வேலையைத் தக்க வைக்க பாடுபட்டு சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டர், பதவிக்காக தனது ஆடிட்டரை காவு வாங்கும் அரசியல்வாதி, குட்டு வெளிபட்டு விடுமென சாமான்யரைக் கொல்லத் துடிக்கும் உதவி ஆணையரென அதிகாரம் அதனதன் அளவில் சக மனிதனை மனிதனாக...
நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. 'உள்ளொற்றி உள்ளுர்..' எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர். கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும்,...
சேது பூமி விமர்சனம்

சேது பூமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம். சாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். 'நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்...
அரண்மனை 2 விமர்சனம்

அரண்மனை 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம். சித்தார்த் ஆச்சரியப்படுத்த...
நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு 'குறி'ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். . அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை. படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே! பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயக...
இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப...
மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2022 இல் நடக்கும் போரில், இந்தியாவிடம் சீனா தோற்கின்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2025 இல் சீனா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் மிகக் குறைவான லோக்கேஷன்களில் எடுக்கப்பட்டுள்ள இயக்குநர் சுகன் கார்த்தியின் கன்னி முயற்சியே இப்படம். ஆனால், பிரம்மாண்டமான கதை. சி.ஜி. (கணினி வரையியல்) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குநர் முடிந்தளவு கதையின் பிரம்மாண்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முனைகிறார். படத்தின் மொத்த சுமையும் மேஜர் சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலை படத்து நாயகன் சுனில் குமார் மேஜர் சரவணனாக நடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், காதல் மனைவியை இடையிடையே ஏக்கத்துடன் நினைவுகூர வேண்டும், சீன இராணுவத்தின் சித்திரவதைகளைத் தாக்குபிடிக்க வேண்டும், இறுதியில் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். எல்லாம் செய்கிறார். சீனரிடம் வீர...
ரஜினிமுருகன் விமர்சனம்

ரஜினிமுருகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் களமிறங்கியுள்ளது அக்குழு. வேலையும் கவலையும் இல்லாத ரஜினிமுருகன் எப்படி தன் தாத்தா சொத்தை விற்கின்றான் என்பதுதான் படத்தின் கதை. தோத்ரியும் ரஜினிமுருகனும் செய்யும் அலப்பறைகள் தான் படம். போதாக்குறைக்கு, இவர்களுடன் ஏழரை மூக்கனும் சேர்ந்து கொள்கிறார். தனி ஆவர்த்தனமாக ரஜினி வெறியராக வரும் வக்கீல் நீலகண்டனும் அசத்துகிறார். எனினும் படத்தின் நீளம் 159 நிமிடங்கள் என்பது இப்படத்திற்குச் சற்றே அதிகம். கதைக்குள் வில்லன் வலுவாக வந்த பின்னும், ‘வெயிட்’ எனச் சொல்லிவிட்டு காதலிக்கவும், பாட்டு பாடவும் போய் விடுகிறார் ரஜினிமுருகன். இந்தப் பொறுப்பற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். நாயகனால் காதலிக்கப்பட கீர்த்தி சுரேஷ். தோத்ரியாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். வேதாளம் படத்திலேற்ற பாத்திரத்தினைப்...
கதகளி விமர்சனம்

கதகளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை. 'கதகளி ஆடுதல்' - சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம். வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது. அமுதவேலாக விஷால். சண்...
தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The Danish girl (A) உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம் பெண்களின் உடை அணிந்து மாடலாக நிற்கச் சொல்கிறார். தன் மனைவிக்கு உதவ பெண்களின் உடையை அணியும் எய்னர், தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்குகிறார். பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. 2000 ஆவது ஆண்டு, எய்னரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு டேவிட் எபர்ஷோஃப் எழுதிய ‘தி டேனிஷ் கேர்ள்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்ட படமிது. புனைவு கலக்கப்பட்ட அவரது நாவல் அழகானதொரு காதலை முன்னிறுத்துகிறது. அக்காதலை, படம் நெடுகே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது லுசிண்டாவின் திரைக்கதை. காதலித்து மணந்து கொண்ட கணவன், ஆறு வருடங்களாக அன்பும் நேசமும் இயைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘நானொரு பெண்ணாக என்னை உணர்கிறேன்’ என்று சொன்னால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? கெர்டாவாக அலிசியா விகேண்டர் அசத்தியுள்ளார். தன் கணவனுக...
கெத்து விமர்சனம்

கெத்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை. சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார். புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை. 'சாவி.. சாவி..' என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் பதி...
தாரை தப்பட்டை விமர்சனம்

தாரை தப்பட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் 1000வது படம் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற படம். சன்னாசி கரகாட்டக் குழு, அதன் பிரதான ஆட்டக்காரி சூறாவளி இல்லாமல் நொடிந்து போகிறது. சூறாவளிக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. சூறாவளி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப வரலட்சுமி அசத்தியுள்ளார். முதல் பாதி படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். சன்னாசி மீது அவர் வைத்திருக்கும் காதல் பிரம்மிப்பூட்டுகிறது. அதை வரலட்சுமி மிக ஆர்ப்பாட்டமாக முன் வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே! படத்தின் நாயகனான சன்னாசியை விட அவரது தந்தையாக வரும் சாமி புலவர் ஈர்க்கிறார். சன்னாசியாக சசிகுமாரும், சாமி புலவராக G.M.குமாரும் நடித்துள்ளனர். கரகாட்டக் குழுவினர் எதிர்கொள்ளும் வறுமையை ஊறுகாய் போல் தொட்டுச் சென்றுள்ளார் பாலா. பாலாவின் படங்களுடைய தீவிரத்தன்மையை, படம் நெடுகே வரும் மெல்லிய எள்ளல்கள் மு...
பாயிண்ட் பிரேக் விமர்சனம்

பாயிண்ட் பிரேக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ 'பாயின்ட் ப்ரேக்' என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு 'பாயின்ட் ப்ரேக்'கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும்.  கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் 'பாயிண்ட் பிரேக்' என்பார்கள். எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் இர...