கோ விமர்சனம்
கோ - ஒழுங்குப்படுத்து, ஒன்றுசேர், எதிர் (oppose), தலைவன் என திரைப்படத்தின் தலைப்பினை பல அர்த்தங்களோடு பொருத்திப் பார்க்கலாம்.மக்களுக்கு ஆரோக்கியமான அரசாங்கத்தை அளிப்பதாக அதகளப்படும் அரசியலுக்குள் வசந்தன் என்னும் பட்டதாரி இளைஞனின் 'சிறகுகள்' அமைப்பு களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களோடு படம் நிறைவுறுகிறது.வசந்தனாக அஜ்மல். அரசியலில் ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட படித்த இளைஞனாக வருகிறார். ஆடம்பர விழாக்களில் செலவிடப்படும் பணத்தில் ஆயிரம் குழந்தைகளைப் படிக்க வைக்கலாமே என்ற ஏக்கத்தினைச் சுமந்தவாறு திரையில் அறிமுகமாகிறார். எதிர்ப்புகளைக் கொண்டு துவளாமல் நம்பிக்கையுடன் மேடையில் பேசும் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.அஷ்வினாக ஜீவா. 'தின அஞ்சல்' என்ற நாளிதழின் கலகலப்பான புகைப்படக் கலைஞராய் தொடக்கம் முதல...