Shadow

திரை விமர்சனம்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா தனது பட நாயகன்களின் முகத்தை உருமாற்றுவதுபோல், சார்லைஸ் தெரான் இப்படத்திற்காக கனக் கச்சிதமாக உருமாறியுள்ளார். ஃப்யூரியோஸாவாக தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக, மொட்டையடித்துக் கொண்டு இயக்குநருக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இப்படம், ஒரு சூப்பர் ஹீரோயின் படம். நாயகனின் பங்கு ...
புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்டன...
இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வரும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்கள் போலின்றி இம்முறை நகைச்சுவைக்கு மாறியுள்ளார். வக்கீல்களான கார்த்திக்கும் மெல்லினாவும் ஒரே வீட்டில் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். எலியும் பூனையுமாக எதிரெதிர் துருவமாக நிற்கும் இவ்விருவரைக் குறிப்பிடத்தான் தலைப்பை இந்தியா பாகிஸ்தான் என வைத்துள்ளனர். படத்தில் காட்டமுத்துவான பசுபதி அறிமுகமானதும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பசுபதி வரும் அனைத்துக் காட்சிகளுமே திரையரங்கு கலகலப்பாகிறது. முக்கியமாக, பத்து பேரை ஓடவிட்டு வெட்டி, ‘டெமோ’ செய்து காட்டும் காட்சியைச் சொல்லவேண்டும். அவரது எதிரணியில் மருதுவாக எம்.எஸ்.பாஸ்கரும், இடிச்சபுளியாக மனோபாலாவும் வருகின்றனர். ஆத்தாவின் அனுமதிக்காக சின் முத்திரை பிடித்து சிலையாகும் மருதுவுக்கு எப்படி எல்லாம் ஆத்தாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது என்பவை ரசிக்க வைக்கிறது. தீனா தேவராஜனின் இச...
உத்தம வில்லன் விமர்சனம்

உத்தம வில்லன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரம(க்குடி) நாத்திகரான கமல்தான், சக மனிதர்களை நேசிப்பவர் கடவுள் என அன்பே சிவம் படத்தில் சொல்ல வேண்டியிருந்தது. இம்முறை, உத்தம வில்லனில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த ஆத்ம விசாரம் செய்துள்ளார். யாருமே வில்லன் இல்லை என்பதுதான் படத்தின் கரு. பின் யார்தான் உத்தம வில்லன்? இந்த வசீகரமான தலைப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்களைக் கொணர்ந்துள்ளார் கமல்!? 1. உத்தமன் என்பவர் கதை சொல்ல தமிழக வில்லுப்பாட்டையும் (வில்லன்), கதையின் களம் செல்ல கேரள தெய்யத்தையும் இணைத்து கூத்து கட்டுபவர். 2. உத்தமன் கட்டும் பிரதான வேடம் வில்லனான (வில்லாளியான) அர்ஜூனன் வேடம். 3. தன் பெண்ணின் விருப்பத்துக்காக, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்கிறார் உத்தம அப்பாவான பூர்ண சந்திர ராவ். 4. கள்ளக் காதலியுடன் தொடர்பில் இருந்தாலும், குடும்பத்தின் மீது பாசத்தைப் பொழிகிறார் உத்தம ஹீரோவான மனோரஞ்சன். 5. படத்துக்குள் எடுக்கப்படும் படத்தின் பெ...
ஒ காதல் கண்மணி விமர்சனம்

ஒ காதல் கண்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின் கூட்டணி எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பில் எண்ணெயும் ஊற்றியது படத்தின் ட்ரைலர். கல்யாணத்தில் விருப்பமில்லாமல் வாழும் காதலர்கள் ஆதியும் தாராவும். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இளமை, காதல், மகிழ்ச்சி, காமம் என முழப் படமுமே கொண்டாட்டமாக உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை படம் நெடுக்கக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ரஹ்மானின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு பி.சி.ஸ்ரீராமின் ஃப்ரேம்களையும் பாடல் காட்சிகளில் துள்ள வைத்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். இந்தத் திறமையாளர்களின் சங்கமம் செய்துள்ள மேஜிக், திரையில் விஷூவல் விருந்தாக ரசிகர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது. எந்த அடுக்குகளும் சிக்கிலுமில்லாத கதையை எடுத்து தனக்கே உரித்தான அழகியலோடு எளிமையாக திரைக்கதை அமைத்துள்ளார் ...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ஆவ...
நண்பேன்டா விமர்சனம்

நண்பேன்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓகே.. ஓகே.. அளித்த நம்பிக்கையில், சந்தானத்தை இணைத்துக் கொண்டு 'நண்பேன்டா" வரை வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஒரே நாளில் தனக்குப் பிடித்த பெண்ணை மூன்று முறை பார்த்து விட்டால், சத்யாவின் வாழ்க்கை ஓஹோவென்று ஏற்றம் காணுமென அவனது ஜாதகத்தில் இருப்பதாக சத்யாவின் அம்மா சொல்கிறார். பின் என்ன? அதேதான்.! இயக்குநர் ராஜேஷ் போட்டுக் கொடுத்த கோடில் இருந்து வழுவாதவராய் சத்யா எனும் பாத்திரத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட, நயன்தாரா உடனான காட்சிகளில் தயக்கம் துறந்து நெருக்கமாக நடித்துள்ளார் உதயநிதி. ஆனாலும் சந்தானம் போதும், புதிதாக கதையில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாமென்ற அவரது நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிவக்கொழுந்துவாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் சந்தானம். இந்தப் படத்தில் உதயநிதியின் காதலுக்கு இவர் யோசனையும் சொல்லவில்லை; உதவியும் செய்யவில்லை. ‘சூப்பர் ஃபிகர்’ ரம்யாவா...
இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர். தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை. மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.! ஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் ம...
எனக்குள் ஒருவன் விமர்சனம்

எனக்குள் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது. ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை. சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார்....
தொப்பி விமர்சனம்

தொப்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை. படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...
எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே வருகிறார். ஆனால் சாராவாக வரும் ஸ்ரீமுகியை படத்தின் நாயகி எனச் சொல்லுமளவு நடித்துள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரமான தமிழாக படத்தில் தோன்றியுள்ளார் K.S.தங்கசாமி. படத்தின் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தை வேறு எவரையேனும் நடிக்க வைத்திருக்கலாம் அவர். காவல்துறை அதிகாரி ரகுபதியாக நடி...
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை. வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்த...
பொங்கி எழு மனோகரா விமர்சனம்

பொங்கி எழு மனோகரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம். சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை. சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, அம்மாவின் பாசத்துக்கு ஏங்குவது, நண்பர்களுடன் இணைந்து கும்மாளம் அடிப்பது, காதலிக்கிறேன் பேர்வழி என பேருந்துக்காகக் காத்திருப்பது, பெட்டிக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் வழிவது, பால் கறந்து கேனில் சைக்கிளில் பால் கேன் கொண்டு செல்வதென படம் முழுவதும் பரபரப்பாக நடித்துள்ளார்...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...
இசை விமர்சனம்

இசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன். இது போன்ற உளவியல...