
அதிபர் விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்க...
















