
ஈரம் விமர்சனம்
"ஈரம்" என்ற பெயரைப் பார்த்தவுடன் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் சில்லென்ற மற்றொரு "காதல்" படம் என நினைத்திருந்தால் அது பாதி தான் உண்மை. இது த்ரில்லர் படமும் கூட என்பது தான் மீதி பாதி உண்மை. ஆனால் இரண்டு பாதி உண்மையும் தலைப்பை போல் சில்லென்றே உள்ளது என்பது மற்றொரு உண்மை.ரம்யா என்னும் மணமானப் பெண் தனது கள்ளத் தொடர்பு தெரிந்ததால் தற்கொலை செய்துக் கொள்ள, அதை விசாரிக்க வாசுதேவன் என்னும் காவல் துறை அதிகாரி வருகிறார். வாசுதேவனும் ரம்யாவும் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தவர்கள். தன் காதலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் வாசுதேவன் மேலும் விசாரிக்கிறார். எதிர் வீட்டு மாமி, அந்த பிளாட்டில் வசிக்கும் முதியவர், வாட்ச் மேன் என அனைவரும் ரம்யாவின் பிளாட்டுக்கு ஒருவன் வந்து விட்டு போவதாக குறைக் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து குறை கூறிய மாமி ஒரு விபத்திலும், முதியவர் மர்மமான முற...