
யாசகன் விமர்சனம்
படத்தில் யாரும் யாரிடமும் எந்த யாசகமும் பெறவில்லை. பின் படத்திற்கு ஏன் இந்தத் தலைப்பு எனத் தெரியவில்லை.
அனைவருக்கும் தேடிச் சென்று உதவிச் செய்யும் நாயகன், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை.
கொஞ்சம் தாடியுடன் அதிகம் சிரிக்காத சூர்யாவாக நடித்துள்ளார் நாயகன் மகேஷ். வேலைக்கு இன்ட்டர்வியூக்குச் செல்லும் பொழுதுகூட, அவரது உடையிலும் முகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. சிரிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளில்கூட சோர்வாகவே காணப்படுகிறார். ‘அங்காடித் தெரு’ படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான் என்றாலும்கூட, வலுவாக பார்வையாளர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது சந்தேகம்தான். இதற்கே அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
ஷாலனியாக அறிமுக நாயகி நிரஞ்சனா நடித்துள்ளார். கேரளத்திலிருந்து இன்னுமொரு வரவு. கண...
















