
வில்லா விமர்சனம்
ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர். எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.
எழுத்தாளர் ஜெபினாக அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில், ஒரு பெண்ணால் வேலையிழக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தாடி வைத்த முகத்துடன், மருந்துக்குக் கூட சிரிக்காத விரக்தியில் உழல்பவராக வருகிறார். தனக்கு சொந்தமாக மாளிகை இருக்கு என்று அறியும் பொழுதும், நாவலுக்காக ஐந்து லட்சம் ரூபாய் முன் பணம் பெறும் பொழுதும் கூட முகமலர மாட்டேங்கிறார். அவனது தந்தை வரைந்த ஓவியங்களில் உள்ளவை அனைத்தும் ஏன் அப்படியே நிகழ்கின்றன என்ற குழப்பமும், அதற்கான தேடலும் தான் முழுப்படமுமே!நாயகன் என்றால் உத்தமனாக இருக்க வேண்டுமென்ற திரை இலக்கணங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்...
















