Shadow

திரை விமர்சனம்

டமால் டுமீல் விமர்சனம்

டமால் டுமீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை. MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் அறிமுகமாகும் முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போலீஸ்காரரும், ஒரு ரெளடியும் அவரது வீட்டுக்குள் வந்து ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு இறக்கும்பொழுது, அவர் காட்டும் பாவனை ரசிக்க வைக்கிறது. மீராவாக ரம்யா நம்பீசன். காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் படத்தில் அவர் இருந்தாலும், சினிமாத்தனம் இல்லாத நாயகியாக வருகிறார். சில இடங்களில் வைப...
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
மான் கராத்தே விமர்சனம்

மான் கராத்தே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்...
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிம்புதேவன் இயக்கம் என்ற எதிர்பார்ப்புடன் செல்பவர்களை ஏமாற்றாமல், தனது நேர்த்தியான திரைக்கதையால் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர். நேரத்துக்கும் விதிக்கும் தொடர்புள்ளதா என நாரதருக்கு ஒரு சின்ன சந்தேகம். உலகின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிஸியாகிட்டேன் எனச் சொல்லும் பிரம்மா, தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானிடம் அந்தக் கேள்வியைக் கொண்டு செல்கிறார். நேரத்துக்கும் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நாரதருக்கு சிவபெருமான் ‘லைவ் ஷோ’ காட்டி விளக்குவதுதான் படத்தின் கதை. இசபெல்லாவை, அவளது திருமணத்தன்று கடத்த திட்டமிடுகிறான் தமிழ். அவன் வீட்டை விட்டு காலை 08:59க்குக் கிளம்பினால் என்னாகும், பின் ஒரு நிமிடம் கழித்து 09:00க்கும், இரண்டு நிமிடம் கழித்து 09:01க்கும் கிளம்பினால் என்னாகும் என்பதுதான் சிவன் நாரதருக்கு காட்டும் டெமோ! மூன்று களவாணிகளாக அருள்நிதி, பிந்து மாதவி, ப...
ஓல்ட் பாய் (2003)

ஓல்ட் பாய் (2003)

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரியத் திரைப்படம் இது. ஆனால், கண்ணுக்குக் கண், இரத்தத்திற்கு ரத்தம் என நாம் வழக்கமாக யூகிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமில்லை. படம் மனிதனின் பழி வாங்கும் மனநிலையை மட்டும் பேசாமல், தான்வகுத்த சமூகக் கட்டுபாடுகளுக்குத் தன்னை எந்தளவுக்கு ஒப்படைத்துள்ளான் என்பதையும் நுணக்கமாகச் சித்தரிக்கிறது. ஒரு மனிதனைப் பதினைந்து வாருடங்கள் தனியாக ஓர் அறையில் அடைத்து வைத்தால் அவன் மனநிலை எப்படியிருக்கும்? ஓ-டேசு என்பவரை ஓரிரவு கடத்தி விடுகின்றனர். அவரது மனைவியும் கொல்லப்பட, அந்தப் பழியும் ஓ-டேசு மீது விழுகிறது. யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்று தெரியாமல் பதினைந்து வருடம் அறையில் அடைப்பட்டு உள்ளார். அறையில் இருக்கும் தொலைக்காட்சிதான் ஒரே துணை. மனைவி கொல்லப்பட்டதையும் அதில்தான் தெரிந்து கொள்கிறார். அந்தக் கொடும் தனிமையால் அவர் பைத்தியமாகிவிடாமல் ...
பனிவிழும் நிலவு விமர்சனம்

பனிவிழும் நிலவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை. ‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக். ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம். படத்தின் முதற்பாதியைத் தனது விபரீதக் கற்பனையால் ஓரளவு சுவாரசியப்படுத்துவது வெண்ணிறாடை மூர்த்தி என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது மீனா அக்காவாக வரும் கோவை சரளா. அவர் வந்த பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. அவரது கண்ணுக்கு மட்டும் தெரியும் அவரது கனவரது பெயர் கமல் என்கிற ...
கேரள நாட்டிளம் பெண்களுடனே விமர்சனம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
டைட்டில் போடும் பொழுதே கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. அந்தக் கொண்டாட்டத்தை படம் முடியும் பொழுதும் உணர விடுகிறது. கேரளப் பெண்ணைதான் மணக்க வேண்டுமென சொல்லிச் சொல்லி தன் மகனை வளர்க்கிறார் தமிழ்மணி. அவரது மனைவியோ, தமிழ்ப் பெண்ணை தான் மகன் மணக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளார். அவர்களது மகன் உன்னி கிருஷ்ணன் எந்த மாநிலத்துப் பெண்ணை மணந்தார் என்பதுதான் படத்தின் கதை. கலைமாமணி பேராசிரியர். முனைவர். திரு. கு.ஞானசம்பந்தன் என அவர் பெற்ற விருது, செய்யும் வேலை, வாங்கிய பட்டம் என பெயருக்கு முன் சகலத்தையும் போடுகின்றனர். நாயகனின் பெயருக்கும் முன்னால் இவரது பெயர் திரையில் வருகிறது. படத்தின் கதையைத் தொடக்கி முடிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். கூலிங் கிளாஸை ஸ்டைலாகக் கழட்டுவது, துண்டை அநாயாசமாக தோளில் போடுவது, மீசையை முறுக்குவது என படத்தின் ஆல் ரவுண்டராக உள்ளார். கடைசி வரை விடாக்கொண்டனாக, தனத...
குக்கூ விமர்சனம்

குக்கூ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய படம் தமிழில் அரிதினும் அரிதாகவே வருகிறது. அப்படியொரு அரிதான படம் குக்கூ. பார்வையற்ற இருவருக்குள் மலரும் கலர்ஃபுல்லான காதல்தான் படத்தின் கரு. ‘அட்டகத்தி’ தினேஷ் தமிழாகக் கலக்கியுள்ளார். மூன்று மாதம் பார்வையற்றவர்களுடன் உடனிருந்து அவர்களது உடல்மொழியை அவதானித்து அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளார். இத்தகைய படத்தில் நடிப்பதைவிட வேறென்ன பேறு ஒரு நடிகருக்குக் கிடைத்துவிட முடியும்? சுதந்திரக்கொடியாக மாளவிகா. நமக்கு வேண்டப்பட்ட ஒரு நபர் போல், அவரை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது அவரது பொலிவான முகம். ஒரு படத்தின் கதையில் நாயகி முக்கியத்துவம் பெறுவதே அதிசயம். அதிலும் நாயகனுக்கு நிகராக நாயகிக்கும் நடிக்க காட்சிகள் அமையப்பெற்றால்? 99% நாயகிகளுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பினை மிகக் கச்சிதமாக மாளவிகா பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். “அண்ணா.. ஆம...
யாசகன் விமர்சனம்

யாசகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் யாரும் யாரிடமும் எந்த யாசகமும் பெறவில்லை. பின் படத்திற்கு ஏன் இந்தத் தலைப்பு எனத் தெரியவில்லை. அனைவருக்கும் தேடிச் சென்று உதவிச் செய்யும் நாயகன், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. கொஞ்சம் தாடியுடன் அதிகம் சிரிக்காத சூர்யாவாக நடித்துள்ளார் நாயகன் மகேஷ். வேலைக்கு இன்ட்டர்வியூக்குச் செல்லும் பொழுதுகூட, அவரது உடையிலும் முகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. சிரிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளில்கூட சோர்வாகவே காணப்படுகிறார். ‘அங்காடித் தெரு’ படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான் என்றாலும்கூட, வலுவாக பார்வையாளர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது சந்தேகம்தான். இதற்கே அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. ஷாலனியாக அறிமுக நாயகி நிரஞ்சனா நடித்துள்ளார். கேரளத்திலிருந்து இன்னுமொரு வரவு. கண...
காதல் சொல்ல ஆசை விமர்சனம்

காதல் சொல்ல ஆசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் தன் காதலை நாயகியிடம் சொன்னானா என்பதுதான் படத்தின் கதை. வாழையடி வாழையாக மகேஷின் குடும்பத்தினர் போலீஸ் வேலையில் இருக்கிறார்கள். மகேஷிற்கு அவ்வேலையில் விருப்பமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடுகிறான். காதலுக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அடியாளாகச் சேருகிறான். மமேஷாக அஷோக் நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும் அவரது முந்தைய படங்கள் போல் இதுவும் அவருக்கு பெயர் வாங்கித் தருவது கடினம்தான். சுசித்ராவாக வாஸ்னா அகமத் நடித்துள்ளார். நாயகன் வில்லனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதும் காதலிக்கத் தொடங்குகிறார். பார்த்துப் பழக்கப்படாத சுவாரசியமான காட்சிகள் இல்லாததால், நாயகியின் முகம்கூட படம் முடிந்த பின் நினைவில் நிற்கவில்லை. படத்தின் அழகான ஆச்சரியம் கெளதமாக வரும் மது ரகுராம்தான். இரண்டாம் பாதியில் அசத்தலாக அறிமுகமாகிறார். இவரது வருகையின் பின்னாவது கதையில் ஏதேனும் திருப்பமோ சுவாரசிய...
ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம்

ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் முதல் காதல் ஏமாற்றத்திலும், அடுத்த காதல் கல்யாணத்திலும் முடிகிறது. நாயகனாக விவேக் ராஜகோபால். எந்தக் கவலையுமற்ற ஜாலியாக சுத்திச் சுத்தி வரும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகளில் சிரித்தவண்ணமே உள்ளார். ஆனால் அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறையே! அதேபோல் முதல் காதலி காவல் நிலையத்தில் வைத்து ஏமாற்றிவிட, நாயகன் செம சோகமாகிவிடுகிறார். எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத நாயகன் நிஜமாகத்தான் காதலித்திருப்பாரா என சந்தேகம் நமக்கு தீரும் முன்பே, ஒரு பாட்டிலேயே அவர் சோகத்திலிருந்து மீண்டு பாலை வார்க்கிறார். அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என நாயகனின் மொத்த குடும்பமே மருத்துவர்கள். வெளியில் திட்டிக் கொண்டும் உள்ளுக்குள் எதிர்மாறாக இருக்கும் அப்பாவாக பிரமிட் நடராஜனும், கேட்கும் பொழுதெல்லாம் பணம் தரும் பாசக்கார அம்மாவாக மீராகிரு...
ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா? இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று. நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை. சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக...
ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஆதியும் அந்தமும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வருகிறது. இரண்டாம் பாதி படமோ முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட ஃப்ளாஷ்-பே...
தெகிடி விமர்சனம்

தெகிடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர். டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை. மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும். மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கிய...
பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி. மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை ...