
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இன...
















