Shadow

திரை விமர்சனம்

ஹரிதாஸ் விமர்சனம்

ஹரிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!!ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை. ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை 'அப்பா'. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இ...
அமீரின் ஆதி பகவன் விமர்சனம்

அமீரின் ஆதி பகவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெளனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அசத்திய இயக்குநர் அமீரின் அடுத்த படம். நீண்ட இடைவெளிக்குப் பின் அவரின் நான்காவது படம் வெளியாகியுள்ளது. இடையில் யோகி என்னும் படத்தை எழுதி தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு தாதாக்கள் மோதிக் கொள்வது தான் படத்தின் ஒரு வரி கதை.ஆதி ஷண்முகம், பகவான் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. வழக்கமான அமீர் பட நாயகன் போல் ஜெயம் ரவி முதல் பாகத்தில் நிறைய நடந்தாலும்.. ஜெயம் ரவிக்கு கோட், சூட், கூலிங் கிளாஸ் போட்டு வித்தியாசப்படுத்தியுள்ளார் அமீர். முகத்தில் மரு ஒட்டுவதெல்லாம் பழைய பாணி என்பதால் பாகவனுடைய வலதுக் கண்ணின் மேல் ஒரு வளையமும், உதட்டில் சிவப்பு லிப்-ஸ்டிக்கும் போட்டு இரட்டையர்கள் வித்தியாசப்படுத்தியுள்ளனர். இந்த வித்தியாசம் மட்டும் போதுமா என.. பகவானை கொஞ்சமாக நெளிந்தாற் போல் நடக்க வைத்தும், வலதுக்கை கட்ட...
விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.படத்தின் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் கமல் என்னும் உன்னத கலைஞர் தனது நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார். அவரது நடனம், பார்வை, நடை, வசனம் பேசும் தொனி என சகலத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அதன் பின் படத்தில் கோலேச்சுவது இயக்குநர் கமல். தமிழ் சினிமா கண்டிராத ஒரு தொழில்நுட்ப விருந்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். படத்தின் மாபெரும் பலம் வசனங்கள். வசனங்களுக்கு Epigram என்றொரு தனி குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் நாயகன் இரத்தம் வருமளவு உதை வாங்கும் பொழுதும்.. வசனங்கள் அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. அதே போல் நாயகிக்கும், எஃப்.பி.ஐ. அதிகாரிக்கும் நடக்கும் கடவுள் பற்றிய உரையாடல் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் பெண்ணை ...
கடல் விமர்சனம்

கடல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான இணைகளின் வாரிசுகள் அறிமுகமாகும் படம்;  அதே போல் சுமார் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கிறார். ஆர்ப்பரித்திருக்க வேண்டிய கடல், அலைகள் ஓய்ந்த இராமேஸ்வரம் கடற்கரை போல் அமைதியாக உள்ளது.  அதை தான் "ஆழ்ந்த தத்துவமும், ஆன்மீகமும் கொண்ட ஸ்க்ரிப்ட்" என இப்படத்திற்கு கதை - வசனம் எழுதிய ஜெயமோகன் படத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார் போலும்.  தேவனை கோபித்துக் கொள்ளும் சாத்தான், தேவனை பழி வாங்க நினைப்பது தான் படத்தின் கதை.சாத்தான் தான் இந்தப் படத்தின் நாயகன். பெர்க்மன் என்னும் சாத்தானாக அர்ஜூன். அதுவும் பைபிளை கரைத்துக் குடித்த புத்திசாலி சாத்தான். விளையாட்டு, குதூகலம், கேலி, கிண்டல், மகிழ்ச்சி என வாழ்வைக் கொண்டாடும் சாத்தான். மன்னிக்க விரும்பாத தேவன் ஒருவனால் சாத்தான் காட்டிக் கொட...
கண்ணா லட்டு தின்ன ஆசையா! விமர்சனம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா! விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு 'பவர் பொங்கல்' என்றே சொல்ல வேண்டும். பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீநிவாசனின் பிடிவாதமான மூலதனம் எதுவும் வீண் போகவில்லை. ரஜினிக்கு போட்டியாக வளர வேண்டும் என்ற அவரது கனவிற்கு 'இதுதமிழ் குழுமம்' சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சிவாவின் எதிர் வீட்டிற்கு குடி வரும் செளம்யாவை, சிவாவும் அவரது இரண்டு நண்பர்களும் காதலிக்கின்றனர். செளம்யா மூவரில் யாரது காதலை ஏற்றுக் கொள்கிறார் என்பதுடன் படம் முடிகிறது."பவர்" குமாராக பவர் ஸ்டார். 'லொள்ளு சபா' மனோகர் போல் கையை வளைத்து நீட்டிப் பேசுகிறார். நல்லவேளை வசனமும் அவர் போல நீட்டி முழுக்கி பேசவில்லை. நிலத்தில் வீசி எறியப்பட்ட விறால் மீன் போல படம் நெடுக்கும் நின்று பேசாமல் ஏதோ தாள லயத்துடன் துள்ளிக் கொண்டே இருக்கிறார். படத்தில் அவர் பரதம் கற்றுக் கொள்ளும் இடமெல்லாம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நடனம் ...
அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டேஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போலஅகப்பட்டீர்,கிடந்து உழல அகப்பட்டீரே ! - பட்டினத்தார்.  பணம் கொடுத்து இப்படத்தினை திரையரங்கில் பார்ப்பவரின் மனநிலையை தான் என்ன அழகாக பட்டினத்தார் சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். போருக்குச் செல்பவர், நோயில் வீழ்ந்தவர், சகிக்க முடியாத துன்பத்தில் சிக்கியவர், தனிமையில் வாடும் முதியவர்கள் தான் தத்துவ விசாரத்தில் இறங்குவர். அப்படி ஒரு மனநிலைக்கு இப்படம் இட்டுச் செல்கிறது. விதி பற்றிய நம்பிக்கையும், போன பிறவியில் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்ற கேள்வியும் ஒருங்கே மனதில் எழுகிறது.   நாயகனே முதல்வர் பெண்ணைக் கடத்தி விட்டு, பின் வில்லனிடமிருந்து நாயகியை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.நாயகன் கார்த்தியின் அடி ஒவ்வொன்றும் சும்மா இடி போல விழுகி...
நீ தானே என் பொன்வசந்தம் விமர்சனம்

நீ தானே என் பொன்வசந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அலைபாயுதே படத்தில் வரும் 'எவனோ ஒருவன் யாசிக்கிறான்..' பாடல் தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கே  இன்ஸ்பிரேஷனாம். நீ தானே என் பொன்வசந்தம் படமும் அதன் தொடர்ச்சி தானென கெளதம் வாசுதேவ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். எங்கிருந்து கருவை எடுத்தார் என்று தெரிவதால், படத்தின் கதையையும் சுலபமாக யூகித்து விட முடியும். அதாவது நாயகன் நாயகி் காதலிக்கிறார்கள். புரிதலின்மையால் சண்டை வந்து பிரிகின்றனர். சேர்ந்தார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.நாயகன் வருண் கிருஷ்ணனாக ஜீவா. பள்ளி, கல்லூரி என அவர் வயதை குறைத்து காட்ட தேவைக்கதிகமாகவே ஜீவாவின் முகத்தை மழித்து விட்டிருக்கிறார்கள். ஜீவா அருமையான நடிகர் என்றாலும், 10ஆம் வகுப்பு, ட்யூஷன் போன்ற ஏரியாக்களில் 3 படத்தில் தனுஷ் ஸ்கோர் செய்தது போல் ஜீவாவால் சோபிக்க முடியவில்லை. ஜீவாவின் உடல் திணம் காரணமாக இருக்கலாம். மற்றபடி கெளதம் வாசுதேவ் உருவாக்கிய ப...
கும்கி விமர்சனம்

கும்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மைனாவின் எச்சமாக.. மலைக்காட்டுக்குள் மீண்டுமொரு காதல் கதை.நாயகியை கண்ட முதல் பார்வையிலேயே காதலில் விழும் மாறுபடாத பாத்திரத்தில் விக்ரம் பிரபு. நடிகர் பிரபுவின் மகன். மாணிக்கம் என்னும் யானையை வளர்த்து வரும் பாகன் கொம்பனாக நடித்துள்ளார். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், அனைத்தையும் இழந்த பின் தனது காதலை சுயநலமென உணருகிறான். படத்தின் நாயகன் யானை என்பதால், விக்ரம் பிரபுவிற்கு ஹீரோயிசத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆனால் மாறுபட்ட படத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் அறிமுகத்தினை அவரது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.நாயகி அல்லியாக லட்சுமி மேனன். காட்டு யானையைப் பார்த்து மிரள்வது, பின்கும்கி யானையின் துதிக்கையைத் தொடும் பொழுதெழும் கூச்சத்தை நாக்கைத் துழத்தியவாறு வெளிப்படுத்துவது, வாஞ்சையுடன் யானைக்கு பழங்கள் அளிப்பது,ரேஞ்சரைப் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாவது என நடிப்பி...
நீர்ப்பறவை விமர்சனம்

நீர்ப்பறவை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலித்து மணம் புரிந்துக் கொண்ட ஒரு தம்பதியின் வாழ்க்கை, சம கால அரசியலால் எப்படிச் சிதைகிறது என்பதே படத்தின் கதை.சாகச நாயகனாக விஷ்ணு. அவர் உலகத்தைப் படிச்சவர் என்ற நந்திதாதாசின் வசனத்தில் அறிமுகமாகிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகனுக்குள் மலரும் காதலைப் போல் நாயகியின் தொடுதலில் இருந்தே தொடங்குகிறது. என்ன 'தன்தனதன்தன..' என பின்னணி இசை மட்டுமில்லை. காதல் வந்ததும் மெல்ல நாயகன் சாகசக்காரான் ஆகிறான். ஊரில் குடியை ஒழிக்கிறான்; தனி கப்பல் வாங்குவதாக சவால் விடுகிறான்; சாதிக்கிறான்; பின் காணாமல் போகிறான்.நாயகியாக சுனைனா. இயக்குனரின் முழுத் திறமையும் சுனைனாவை 'எஸ்தர்' என்னும் காதாபாத்திரமாக மாற்றியதில் மட்டுமே செலவழித்திருப்பார் போல. நன்றாக நடித்திருக்கும் விஷ்ணுவை விடவும் சுனைனா அதிகமாக ஈர்க்கிறார். ஆனால் படத்தின் பெரும் அதிர்ச்சி சுனைனா வளர்ந்து நந்திதா தாஸ் ஆவது தான். கரையில் நின்று கடலை வெ...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.   அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. என்பதற்கு எல்லாம் பதில் திரையில்.   தற்காலிகமாக நினைவிழுக்கும் ப்ரேமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். செப்டம்பரில் சுந்தர பாண்டியன், அக்டோபரில் பீட்சா, நவம்பரில் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் என இந்த வருடத்தின் முடிவு அவருக்கு நிறைவாய் அமைந்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் பெற்ற 'தென்மேற்கு பருவக் காற்று' என்னும் படத்தில்  நா...
லைஃப் ஆஃப் பை விமர்சனம்

லைஃப் ஆஃப் பை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு புலியை உங்களால் நேசிக்க இயலுமா? அதுவும் அதனிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் பொழுது? 'பை' என்ற பெயருடைய 16 வயது சிறுவன் அப்படித் தான் சிறு கப்பலில் புலி ஒன்றுடன்  பசிஃபிக் பெருங்கடலின் மத்தியில் தனியனாய் சிக்கிக் கொள்கிறான்.சுரஜ் ஷர்மா. 16 வயது 'பை'யாக நடித்துள்ளார். கதை சொல்லி இர்ஃபான் கானாக இருந்தாலும் சுரஜ் தான் படத்தின் நாயகன். இந்தக் கதாபாத்திரத்திற்காக சுமார் 3000 பேர்களில் இருந்து சுரஜை வடிகட்டி எடுத்துள்ளார் இயக்குனர் ஆங் லீ. சுரஜும் பொறுப்பை உணர்ந்து படத்தை தன் முதுகில் அழகாக சுமந்துள்ளார். ஆனந்தியை பின்தொடர்ந்து செல்லும் சுரஜ்,  அவள் அபிநயிப்பது போல் அபிநயித்து, அதன் பொருளை வினவி, "காட்டுக்குள்ள ஏன் தாமரை!?" என அப்பாவியாக கேட்பதில் இருந்து படத்தின் இறுதி வரை தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். மேகங்கள் அதிர்ந்து, அதிலிருந்து ஒளிக் கீற்று தோன்றி,  மழை பெய்வதைக் கண்டு கடவுளைக் கண்டே...
துப்பாக்கி விமர்சனம்

துப்பாக்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என தொடர் ஏமாற்றங்களில் இருந்து ரசிகர்கள் மீளவும், இந்த வருட தீப ஒளி திருநாளைக் கொண்டாட்டமாக்கவும் வந்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் படம்.விடுமுறைக்கு வரும் இராணுவ வீரர் ஒருவர், தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருக்கும் வெடுகுண்டு தாக்குதலை முறியடிக்கிறார். அதை தொடர்ந்து தீவிரவாதிகளின் தலைவன்  வகுக்கும் வியூகங்களை இராணுவ வீரர் எப்படி சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.ஜெகதீஷ் என்னும் இராணுவ அதிகாரியாக விஜய். இளமை துள்ளலுடன் அழகாய் பாத்திரத்தில் பொருந்துகிறார். உள்ளூர் ரவுடிகளையே தொண்டைக் கிழிய கத்தியால் வெட்டுபவர், தீவிரவாதிகளை சத்தமின்றி டொப்பென சுட்டு தள்ளுகிறார். எப்பொழுதும் போல் நடனத்தில் தனி ஆர்வம் ஏதும் காட்டாமல் வந்தேன், ஆடினேன் என்பது போல் பாடல்களில் தெரிகிறார்.  காஜல் அகர்வால் நாயகியாக. குத்து சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி வழக்கமான தம...
ஸ்கைஃபால் விமர்சனம்

ஸ்கைஃபால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Bond.. James Bond. 23 படங்கள். 50 வருடங்கள். உலகை வசீகரித்துக் கொண்டிருக்கும் Ian Fleming-இன் இறவாக் கதாபாத்திரம்.ஏதாவது ஒரு நாட்டிற்குள் தனியொருவராய் நுழைந்து, வில்லனின் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மூலமாக்கும் வழக்கமான  007 படமல்ல இது. ஓர் அட்டகாசமான துரத்தும் காட்சியுடன் தொடங்கினாலும் படம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்கள். ஒரு சிறு துரும்பைக் கூட உடைக்காமல் படத்தின் வில்லனை கைது செய்து விடுகிறார் 007. சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லனின் வியூகத்தை 007 எப்படிச் சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.டேனியல் க்ரெய்க். ஏற்கனவே இரண்டு படங்களில் ஜேம்ஸ் பான்ட்டாக நடித்திருந்தாலும்.. சீன் கேனரி, ரோஜர் மூர், பியார்ஸ் பிராஸ்னன் என முந்தைய ஜேம்ஸ் பான்ட்கள் மக்கள் மனதில் பெற்ற இடத்தைப் பெற முடியவில்லை. ஆனால் 'ஸ்கைஃபால்' மூலம் டேனியல் க்ரெய்க், தான் ஜேம்ஸ் பான்ட் பாத்திரத்திற்கு மிகப் பொருத்...
மாற்றான் விமர்சனம்

மாற்றான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அயன், கோ என இரண்டு வெற்றிப் படங்களின் தொடர்ந்து வரும் கே.வி.ஆனந்தின் நான்காவது படம். இரட்டையர் பற்றிய படம் என்பது கூடுதல் எதிர்பார்ப்பிற்கான காரணம்.தனது தந்தையின் 'எனர்ஜியான்' என்னும் ஊட்டச்சத்து பானத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஐயப்படும் விமலன் கொல்லப்படுகிறான். விமலனுடன் ஒட்டிப் பிறக்கும் அகிலன், விமலனின் கொலைக்கு காரணமானவர்களை நூல் பிடித்து செல்லும் பொழுது கண்டுபிடிக்கும் திடுக்கிடும் விடயங்களுடன் படம் நிறைவுறுகிறது.இரட்டை வேடத்தில் சூர்யா. வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரட்டையர்கள். அதை காட்சிப்படுத்தவே பெரும்பாலான காட்சிகள் விரயமாக்கப்பட்டுள்ளன. சாருலதாவில் வரும் பிரியாமணிகளைப் போலவே வயிறொட்டிப் பிறந்தவர்கள். எனினும் இருவருக்கும் ஓர் இதயம் என வித்தியாசப்படுத்தி உள்ளனர். ஏழாம் அறிவைத் தொடர்ந்து இப்படத்திலும் டி.என்.ஏ. சூர்யாவை விடாமல் துரத்துகிறது. ஆயினும் குழப்படி மட்டும் தீர்ந்...
சாட்டை விமர்சனம்

சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நடிகர்களின் பெயர்கள் போடும் பொழுதே அரசுப் பள்ளிகளின் மீது சாட்டையை வீசத் தொடங்கி விடுகிறார் அறிமுக இயக்குநர் அன்பழகன். லட்சிய ஆசிரியர் ஒருவர் அலட்சியமாக இயங்கும் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தால் என்னாகும் என்பது தான் படத்தின் கதை.ஈசன் படத்தில் உதவி ஆணையாளர் சங்கைய்யா பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியது போலவே இப்படத்திலும் சமுத்திரக்கனி.. தயாளன் என்னும் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். புகார் பெட்டி ஒன்று வைத்து மாணவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறியும் உன்னத ஆசிரியராக வலம் வருகிறார். அமெரிக்கப் பள்ளியில் மாணவர்கள் தினம் 15 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என கையில் வைத்திருக்கும் 'டேப்'பில் காண்பிக்கிறார். திக்கிப் பேசும் மாணவிக்கு 'டங் ட்விஸ்ட்டிங்' பயிற்சி அளிக்கிறார்.  இப்படி அவர் எது சொன்னாலும், செய்தாலும் ரசிக்க தயாராக ...