32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 35 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 35)
“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித் சினிமா

“யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை” – பா.ரஞ்சித்

“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் கிறிஸ்டி, “இந்தப்படம் எனக்குக் கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப் படத்தில் என்னை கமிட் […]

26/02/2020 Dinesh R
எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி சினிமா

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை […]

25/02/2020 Dinesh R
கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சினிமா

கபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில், சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகராக அறிமுகமாவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் G.தனஞ்செயன் இது குறித்து கூறியதாவது, “கபடதாரி எங்கள் அனைவரின் மனதிற்கும் மிக நெருக்கமான படைப்பு. இப்படத்தின் கதை பற்றி அறிந்த கணத்திலிருந்தே படத்தின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்தில் நாங்கள் பங்கு கொண்ட கணத்திலிருந்தே இப்படைப்பு அனைவரிடத்திலும் மிகப் பெரும் உற்சாகத்தை அள்ளித் தெளித்துள்ளது. படத்தில் […]

25/02/2020 Dinesh R
‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி Others

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி […]

24/02/2020 Dinesh R
ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய் சினிமா

ரசிகர்களின் அன்பில் – மாஃபியா அருண் விஜய்

அருண் விஜய் தனக்கான அடையாளத்தைப் போராடி வென்றவர். தோல்விகளில் பாடம் கற்று, தொடர் வெற்றியைப் பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கைப் பாடம். சமீபமாக அவரைக் காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி […]

24/02/2020 Dinesh R
கட்புலனாகாத சைக்கோ மனிதன் அயல் சினிமா

கட்புலனாகாத சைக்கோ மனிதன்

‘தி இன்விசிபிள் மேன்’ எனும் அறிவியல் புனைவு நாவலை 1897 இல் எழுதினார் H.G.வெல்ஸ். அதை அடிப்படையாகக் கொண்டு, 1933 இல் ‘தி இன்விசிபிள் மேன்’ எனும் திரைப்படம் உருவானது. அதைத் தொடர்ந்து, 1940 இல் ‘தி இன்விசிபிள் மேன் ரிட்டர்ன்ஸ்’, 1951 இல் ‘அபோட் அண்ட் காஸ்டெல்லோ மீட் தி இன்விசிபிள் மேன்’, 1984 இல் சோவியட் படமான ‘தி இன்விசிபிள் மேன்’, 2000இல் வெளிவந்த ‘ஹாலோ மேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, H.G.வெல்ஸின் நாவலைத் […]

24/02/2020 Dinesh R
‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம் சினிமா

‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்துth தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை ஏவி.எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாகப் […]

24/02/2020 Dinesh R
பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின் சினிமா

பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின்

சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தனித்துவமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது, முதல் ஆளாகப் பார்க்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘பாரம் படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காகத் தெருவில் […]

23/02/2020 Dinesh R
இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’ சினிமா

இளைஞர்களைக் கவர்ந்த ‘ஓ மை கடவுளே’

சென்ற வாரம் வெளியான படங்களில் ‘ஓ மை கடவுளே’ படம் வெற்றியை அடைந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இப்படம் பற்றிய ரிசல்ட்டைக் கேட்டபோது, “வெள்ளிக்கிழமை ஓப்பனிங்கில் படம் பெரிதாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருநாட்களிலும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் குவியத் துவங்கினார்கள். குறிப்பாக திங்கள் செவ்வாக்கிழமை கூட தியேட்டருக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்” என்றனர். மேலும், இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி […]

19/02/2020 Dinesh R
“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி சினிமா

“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தைத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் […]

29/12/2019 Dinesh R
“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ் Songs

“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்

அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி”சிங்கிள் பாடலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது, “அனிருத் எங்களது உயிர் நண்பர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது […]

27/12/2019 Dinesh R
கண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’ சினிமா

கண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’

“இயற்கை”, ” மீசை மாதவன்” உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா கன்னடப் பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழில் “தமயந்தி ” என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, சூப்பர் ஸ்டார் ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும், […]

25/11/2019 Dinesh R
ஜுமான்ஜியின் அடுத்த கட்டம் சினிமா

ஜுமான்ஜியின் அடுத்த கட்டம்

ராக் நடிப்பில் வெளிவந்த ஜுமான்ஜி படம் சக்கை போடுபோட்டது. அதைத் தொடர்ந்து, ‘ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்‘  என்கிற படம் டிசம்பர் 13 அன்று வெளிவருகிறது. க்றிஸ் எழுதிய 2 புத்தகங்களின் அடிப்படையில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை, ஜுமான்ஜி (1995), ஜதுரா: என் ஸ்பேஸ் அட்வன்ச்சர் (2005) மற்றும் ஜுமான்ஜி: வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம் (2017) ஆகும். அம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஜுமான்ஜி, 1996 […]

24/11/2019 Dinesh R
காதலில் நனைக்கும் மழை சினிமா

காதலில் நனைக்கும் மழை

ஆன்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலைச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்திச் சொல்வதாய் அமைந்துள்ளது படம் குறித்துப் பேசிய அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார், “இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களைப் பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு […]

24/11/2019 Dinesh R
வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப் Trailer

வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான […]

24/11/2019 Dinesh R