32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 37 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 37)
சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்! அயல் சினிமா

சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து புது சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் சாஹோ. தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால், வசூலில் இங்கே சற்றே சுணக்கம் நிலவுகிறது. ஆனால், இந்திய அளவில் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியாவிற்கே ஒரு வழி என்றால், தமிழகத்திற்கு மட்டும் தனி வழி என்பதைப் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்தது போல், சாஹோ பட வசூலிலும் நிரூபித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே 100 […]

03/09/2019 Dinesh R
சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை சினிமா

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

‘ஆவ்னி’ எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துச் சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ரேஞ்சர். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரா சினிமாஸ் […]

03/09/2019 Dinesh R
“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி சினிமா

“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. “எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் […]

03/09/2019 Dinesh R
ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’ அயல் சினிமா

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு. வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற […]

03/09/2019 Dinesh R
இசை தான் என் ஜீவன் – அஜீஸ் சினிமா

இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

  7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசையமைப்பாளராகத் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார். 2009 சூப்பர் சிங்கர் சீசன் 2 இல் குரலால் வசீகரித்தவர். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்பொழுதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய, ‘இதுவரை’ பாடல் மிகவும் பிரபலம். பாபி சிம்ஹா […]

29/08/2019 Dinesh R
ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர்  மோத்தி.பா சினிமா

ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா

மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா. “போதை – இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் […]

29/08/2019 Dinesh R
பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி சினிமா

பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி

சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி? அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. விளையாட்டுத்தனமாகச் சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது. தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் […]

29/08/2019 Dinesh R
சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான் சினிமா

சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

பாலிவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தின் விளம்பரத்திற்குத் தோள் கொடுத்துள்ளார். பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாபாத்திர லுக்கை, தனது சுல்தான் படத்து கதாபாத்திர போஸைத் தந்து பயில்வான் படத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார் சல்மான் கான். சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றிக் கூறியபோது, “சல்மான் கானின் இந்த நட்பு ரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் “பயில்வான்” படத்தைப் பிரபலப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த […]

28/08/2019 Dinesh R
மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம் சினிமா

மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் ‘மல்லி’. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். “பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை […]

28/08/2019 Dinesh R
ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன் சினிமா

ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் […]

23/08/2019 Dinesh R
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள் சினிமா

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான […]

20/08/2019 Dinesh R
மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம் சினிமா

மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள படம் “மைதான்”. அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில், இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர். 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் […]

20/08/2019 Dinesh R
தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு சினிமா

தண்டகன் – ராமாயணக் கதாபாத்திரத்தின் பெயரிலொரு படத்தலைப்பு

புகழ் பெற்ற இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால்தான் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே. மகேந்திரன். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர். தொழிற்துறையில் […]

20/08/2019 Dinesh R
சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சினிமா

சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராகத் துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் ‘கன்னி மாடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னி மாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி, “இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்குத் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. […]

19/08/2019 Dinesh R
ஜி.எஸ்.எம்.இன் தேனாம்பேட்டை மகேஷ் சினிமா

ஜி.எஸ்.எம்.இன் தேனாம்பேட்டை மகேஷ்

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை ஆகஸ்ட் 17 அன்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் குறித்து இயக்குநர் எம்.சித்திக் கூறும்போது, […]

18/08/2019 Dinesh R