32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 34 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 34)
பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம் சினிமா

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார். புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் […]

09/03/2021 Dinesh R
எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’ சினிமா

எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பெளண்டேசன் இணைந்து நடத்தும் 19ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்குக் “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, “வருடந்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக, […]

09/03/2021 Dinesh R
டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சினிமா

டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்டப் பெரும் திருப்பத்தின் பொழுது வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் துவங்கிய பின், அக்கட்சி கொடியுடன், இப்படம் வெளியானது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்குப் பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். எதிரிகளின் இந்த சதித்திட்டத்தை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பது […]

09/03/2021 Dinesh R
மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர் சினிமா

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். ‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் […]

05/03/2021 Dinesh R
வி | நானியின் 25வது படம் சினிமா

வி | நானியின் 25வது படம்

இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தியுடன் நானியின் மூன்றாவது திரைப்படம் இது. நானியின் அறிமுகத் திரைப்படமான ‘ஆஷ்தா சம்மா’வின் இயக்குநரும் மோகன கிருஷ்ணாவே! தனது 12 வருட பயணம் குறித்துப் பேசியிருக்கும் நானி, “நான் எப்போதுமே நல்ல நடிகனாக, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தருபவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். ‘ஆஷ்தா சம்மா’ வெளியாகி 12 வருடங்கள் கடந்து விட்டன. ‘வி’ திரைப்படம் மூலம் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தெலுங்கு ரசிகர்கள் என்னை அவர்களில் […]

04/09/2020 Dinesh R
நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம் சினிமா

நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

நானியும், சுதீர் பாபுவும் நடித்துள்ள ‘வி’ படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது. ‘வி’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு படமாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர முயற்சி செய்திருப்பதாக […]

02/09/2020 Dinesh R
காக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன் சினிமா

காக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்

சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜென்ட் என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கவின். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய போராட்டம்  முதல் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி வரையிலான படங்களில் நடித்த அனுபவம் குறித்து பற்றிப் பகிர்ந்துகொண்டார் கவின். “மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் […]

24/07/2020 Dinesh R
தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் சினிமா

தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்

பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றிப் படங்களை தந்தவர். தேவர் சமூகத்தைச் சேர்ந்த சௌத்ரி, தேவரைப் போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராகப் படத்தில் நடிக்கக் கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் […]

01/06/2020 Dinesh R
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா சமூகம்

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், “பொன்மகள் வந்தால்” படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். “எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக […]

25/05/2020 Dinesh R
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள் சினிமா

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 […]

23/05/2020 Dinesh R
“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி சினிமா

“கடைசியாக அது நம்மை நோக்கி வந்துவிட்டது” – ராட்டினம் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி, “ராட்டினம்”, “எட்டுத்திக்கும் மதயானை” ஆகிய படங்களை இயக்கியவர். திருப்பூர் சுப்ரமணியத்தின் முயற்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். “சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு […]

23/05/2020 Dinesh R
“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா சினிமா

“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் ‘பொன்மகள் வந்தாள்’ பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, “இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், […]

21/05/2020 Dinesh R
ஜிகிரி தோஸ்து விக்னேஷ் குமார் சினிமா

ஜிகிரி தோஸ்து விக்னேஷ் குமார்

விக்னேஷ் குமார் தன் திரைப்பயணத்தை, குறும்பட இயக்குநராகவும் 2012 இல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில் முக்கியமாக – கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம், திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா? கெட்டவரா? ஆகிய குறும்படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார். மேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 […]

11/03/2020 Dinesh R
வால்டர் – ஷிரின் காஞ்வாலா சினிமா

வால்டர் – ஷிரின் காஞ்வாலா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நாயகி ஷிரின் காஞ்வாலா. தற்போது சிபிராஜ்க்கு ஜோடியாக ‘வால்டர்’ படத்தில் நடித்துள்ளார். படத்தைப் பற்றிப் பேசிய ஷிரின், “திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நான் சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான […]

11/03/2020 Dinesh R
பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு சினிமா

பிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரொடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்தப் படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் […]

10/03/2020 Dinesh R