32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 52 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 52)
புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா சினிமா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என […]

23/09/2017 Dinesh R
விஜய் சேதுபதியின் எடக்கு சினிமா

விஜய் சேதுபதியின் எடக்கு

எடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் […]

19/09/2017 Dinesh R
வசீகர வெண்பா சினிமா

வசீகர வெண்பா

தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்கக் கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப் பெயருடன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா. சமீபத்தில் வெளியான காதல் கசக்குதையா படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்தக் கதையின் […]

19/09/2017 Dinesh R
பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர் சினிமா

பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

பரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு […]

11/09/2017 Dinesh R
ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி சினிமா

ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு […]

04/09/2017 Dinesh R
களத்தூர் கிராமத்து மிதுன் சினிமா

களத்தூர் கிராமத்து மிதுன்

செப்டம்பர் 15 அன்று, “களத்தூர் கிராமம்” எனும் படம் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் மிதுன் குமார். சினிமா பின்னணி உள்ள அவரது குடும்பம், “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற பேனரில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மகாநதி போன்ற படங்களைத் தயாரித்தவர்கள். தற்போது, மிதுன் “ஐராவத் என்டர்டெயின்மென்ட்ஸ்” எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தின் மூலம், 16 […]

04/09/2017 Dinesh R
ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம் அயல் சினிமா

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான ‘தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது. ‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது! […]

29/08/2017 Dinesh R
முதல் முறையாக ஒரு கன்னடப் படம் சினிமா

முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம். இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, […]

13/08/2017 Dinesh R
“விரைவில் அடுத்த படம்” – இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் திரைத் துளி

“விரைவில் அடுத்த படம்” – இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்

திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்களின் இல்ல விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். ‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார், திரு.தங்கமணி, முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் திருமதி.வளர்மதி, திரு.தளவாய் சுந்தரம், […]

12/08/2017 Dinesh R
“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா சினிமா

“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடியவர் அனுஷா நாயர். கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புழாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்குத் தமிழில் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாய் அமைந்தது. அனுஷா நாயர், ‘மதுரை டூ தேனி வழி […]

10/08/2017 Dinesh R
“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ் சினிமா

“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ்

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்குச் சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா; இன்னொருவர் அஞ்சனா. இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப் […]

01/08/2017 Dinesh R
விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து சினிமா

விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார். தற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ”இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் […]

01/08/2017 Dinesh R
மீசைய முறுக்கு –பாக்ஸர் தம்பி சினிமா

மீசைய முறுக்கு –பாக்ஸர் தம்பி

‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் பேசுகையில்,‘ நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன். பிறகு நண்பர்களின் உதவியுடன் […]

29/07/2017 Dinesh R
4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர் சினிமா

4 கதாபாத்திரங்களில் ‘சோலோ’ துல்கர்

துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது இப்படம். இந்தப் படத்தைப் பற்றிய அறிமுக விழாவில், இயக்குனர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். “சோலோ தான் என் முதல் தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. இந்தப் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்களும் […]

28/07/2017 Dinesh R
ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம் அயல் சினிமா

ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர். “சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு […]

24/07/2017 Dinesh R