32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 53 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 53)
பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது சினிமா

பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. ஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி […]

13/07/2017 Dinesh R
பண்டிகையின் மூன்று பாடல் சினிமா

பண்டிகையின் மூன்று பாடல்

ரங்கூன் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘. இந்தப் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படத்தைக் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பகிர்ந்து கொள்கையில், ”பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் […]

12/07/2017 Dinesh R
சீசரின் பிரம்மாண்டமான போர் அயல் சினிமா

சீசரின் பிரம்மாண்டமான போர்

விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும். ‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி […]

12/07/2017 Dinesh R
பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா சினிமா

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை. “கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி […]

11/07/2017 Dinesh R
கர்மா கட்டும் ‘கட்டம்’ சினிமா

கர்மா கட்டும் ‘கட்டம்’

தமிழ்த் திரையுலகில் , 2017 ஆம் ஆண்டை, இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். புதிய முயற்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது, “முரண்” திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜன் மாதவ் இயக்கும், கட்டம் திரைப்படம் ஆகும். Icreatewonder என்கிற புதிய நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா […]

01/07/2017 Dinesh R
நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு சினிமா

நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

சமீபத்தில், நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர எம். ராஜன் தயாரித்துள்ளார். நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். ‘என்னுடைய தந்தை நாகேஷ், 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல […]

01/07/2017 Dinesh R
மாம்: பெண்ணின் வலிமை சினிமா

மாம்: பெண்ணின் வலிமை

‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்’ என்பதுதான் ‘மாம்’ படத்தின் மையக்கரு. தேவகி சபர்வால், கணவர் ஆனந்துடனும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியைத்தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய […]

24/06/2017 Dinesh R
லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன் சினிமா

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம், ‘பெஹன் ஹோகி தேரி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், “இந்தப் படம், என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்குத் தந்தை மட்டுமல்ல, […]

13/06/2017 Dinesh R
டாம் க்ரூஸின் ‘தி மம்மி’ அயல் சினிமா

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார். சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் […]

08/06/2017 B R Murali Krishnan
லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம் சினிமா

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது.

09/05/2017 Dinesh R
காஷ்மீரில் “ரங்கா” சினிமா

காஷ்மீரில் “ரங்கா”

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் “ரங்கா” படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் – நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. “இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை எனப் பலர் […]

09/05/2017 Dinesh R
வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி சினிமா

வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார். இதைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்கிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் […]

04/05/2017 Dinesh R
மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால் சினிமா

மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் […]

27/04/2017 Dinesh R
மே 12 முதல் ‘உள்குத்து’ சினிமா

மே 12 முதல் ‘உள்குத்து’

‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘உள்குத்து’. அதிரடியான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தைக் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷைக் காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக […]

27/04/2017 Dinesh R