32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 51 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 51)
நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி சினிமா

நட்புனா என்னானு தெரியுமா – படக்குழுவின் பரிசுப் போட்டி

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நட்புனா என்னானு தெரியுமா. விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. […]

07/11/2017 Dinesh R
தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி சினிமா

தல பொங்கலாக வரும் பில்லா பாண்டி

தாரை தப்பட்டை, மருது, ஹரஹர மஹாதேவகி எனப்படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, […]

04/11/2017 Dinesh R
மேயாத மான் மேஜிக் பாதிரியார் சினிமா

மேயாத மான் மேஜிக் பாதிரியார்

தீபாவளி பண்டிகையன்று வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மேயாத மான் படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற காட்சிகளில் ஒன்று, மருத்துவமனையில் ஹீரோவும், அவரது நண்ரும் சண்டை போடும் போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இடையே வந்து சமரசம் செய்வது. ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும் அந்தக் காட்சியில் கிறிஸ்தவ பாதரியாக நடித்த டாக்டர் மேஜிக் சரவணகுமார் தியேட்டரில் கைதட்டல் வாங்கியதோடு, நேரில் பலரிடம் பாராட்டும் பெற்று வருகிறார். மேஜிக் கலைஞராகவும், சிறந்த […]

01/11/2017 Dinesh R
கதை பறையும் ரசூல் பூக்குட்டி சினிமா

கதை பறையும் ரசூல் பூக்குட்டி

கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் […]

01/11/2017 Dinesh R
விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன் சினிமா

விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன்

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு ஆன்த்தாலஜி (Anthology) படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடத் திறமையுள்ளவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்ஃபர் நிறைந்த வேலையால், இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர். ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பைப் பார்த்து மீரா கதிரவனும் பாராட்டும் விதமாகத் தட்டிக் […]

30/10/2017 Dinesh R
“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த் சினிமா

“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள “அவள்” திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். ‘வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார். விக்ரம் […]

30/10/2017 Dinesh R
ஜாக்கி சானின் தி ஃபாரீனர் அயல் சினிமா

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார். ஸ்டீஃபன் லெதர் எழுதிய ‘தி சைனா மேன்’ எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற […]

25/10/2017 Dinesh R
100 தொட்ட சிம்பு சினிமா

100 தொட்ட சிம்பு

நடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு, “என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். 1999இல் வெளியான “மோனிஷா என் மோனோலிசா” படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பம்சம். 100 பாடல்கள் என்ற மைல் கல்லை எட்டியிருக்கும் சிம்பு அதைப் பற்றிக் கூறும்போது, […]

16/10/2017 Dinesh R
முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத் சினிமா

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை  […]

30/09/2017 Dinesh R
யாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி சினிமா

யாமிருக்க பயமே இயக்குநரின் காட்டேரி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டிகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா, கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்தத் […]

28/09/2017 Dinesh R
ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி சினிமா

ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி

விக்ரம் வேதாவிற்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படம், படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. […]

27/09/2017 Dinesh R
கும்பகோணம் குணா சினிமா

கும்பகோணம் குணா

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர் அனைவருக்கும் தெரிந்தவராக நிஜத்தில் வாழ்ந்தவர். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங் ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் – மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் […]

27/09/2017 Dinesh R
கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும் சினிமா

கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்

இந்திய இராணுவத்தில், 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய்ச் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கேயாஸ் தேற்றம். தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரசியமாய்த் திரைக்கதையை […]

27/09/2017 Dinesh R
கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு சினிமா

கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்கக் காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்கப் பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “அழிந்து […]

25/09/2017 Dinesh R
பாடம் சொல்லும் ராஜசேகர் சினிமா

பாடம் சொல்லும் ராஜசேகர்

நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட சில குழப்பங்களால் பலி வாங்கப்பட்ட ஓர் உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’. இயக்குநர் ராஜேஷுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள ராஜசேகர் ‘பாடம்’ படத்தை இயக்கியுள்ளார். ‘Rollon Movies’ சார்பில் திரு.ஜிபின் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் […]

24/09/2017 Dinesh R