
கடிவாள மனசு
"பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு ...அதுக்கு ஐநூறு ரூவா வேணும்" ....
மிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு....
"ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க...நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்", என்றான் வேலுச்சாமி...
அவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து கஞ்சியாவது ஊத்தணும் என்பதுதான் ....
" எப்பா நான் நானூறு மார்க்கு எடுத்திருக்கேன். வாத்தியார், மேல படிச்சா கண்டிப்பா டாக்டர் ஆயிருவேனாரு அதான்" ....
"அப்ப அந்த வாத்தியார்ட்டயே போயி கேளு ராசா ..வந்துட்டான் ..எனக்கு இருக்ற வெளத்துக்கு கட்ட வெலக்கமாரு பிஞ்சு போகும் பாத்துக்க...நான் இன்னிக்கு என்ன செய்ய ...நாளைக்க...