கதைபுதிர் கோணங்கள்
ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள். யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். […]















