Shadow

தொடர்

ஆர்ய மாலா (1941)

ஆர்ய மாலா (1941)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வ...
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! மிகவும் புகழ் பெற்ற இப்பாடலை விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் மிகவும் உற்சாகமாகப் பாடுவார்களாம். இந்த வீரமிக்க பாடலை இயற்றி தேசியக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். கோவை மாவட்டம் மோகனூர் என்கிற கிராமத்தில் 1888 ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களில் நாட்டமுடையவராக இருந்தார். ஆரம்பத்தில் கவிதையைவிட ஓவியம் வரைவதிலேயே அதிக விருப்பமுடையவராக இருந்து அதில் சற்று சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். கவிபாடும் திறனும் இருந்ததால் டி.கே.எஸ்.சகோதரர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது, அவர்கள் நடித்து வந்த நாடகங்களுக்குப் பாடல்கள் இயற்றியதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லுகிறது. காந்தியின் மீதும், காந்தீயத்தின் மீது...
சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. அறிஞர் அண்ணாவைப் பற்றி சுருக்கமாக எழுதுவது மிகவும் சிரமமான காரியம். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் போட வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகில் அறியாதவர் யார்? எனவே மிகச் சுருக்கமாகச் சில. காஞ்சிபுரம் என்றால் பட்டு மாத்திரமல்ல; அண்ணாவும் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறார். 1909 செப்டம்பர் மாதம் பிறந்தார். நூறாண்டு கடந்து விட்டது. அண்ணா, ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு சுயமரியாதைக்காரராகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எனவே அவர் நீதிக்கட்சிக் காரராக இருந்தது ஆச்சரியமில்லை. 1934இல் அவருக்கும் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சரளமாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேடையில் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். நீதிக்கட்சியில் அதன் கடைசிக் காலங்களில் சில நிர்வாகப் பொறுப்புக்களிலும் இருந்திருக்...
புதுமைப் பித்தன்

புதுமைப் பித்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. இயற்பெயர் சொ. விருத்தாசலம். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்தது கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் எனும் ஊர். இவரது தந்தை அப்போது இந்த ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார். ஆரம்பக் கல்வியை திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கற்றார். 1918இல் தகப்பனார் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள். படிப்பைத் தொடர்ந்தவர் 1931இல் திருநெல்வெலி இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டு (1931) இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி கமலா திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர். புதுமைப்பித்தனின் ஆரம்பப் படைப்புகள் டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய 'காந்தி' பத்திரிகையில் வெளிவந்தது. மொத்தம் மூன்று கட்டுரைகள். அதன் பின்னர் தான் 1934இல் 'மணிக்கொடி' இலக்கிய இதழில் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" என்கிற சிறுகதை முதன்முதல் பிரசுரம...
கவியோகி சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்த பாரதியார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாகச் சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது. எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில் கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்...
மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா..." என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் பாடப்பட்ட கவிஞர் பாரதியார். தமிழின் நவீன யுகத்தின் மகாகவி, முதல் தமிழ்க் கவிஞன்.சுப்ரமணிய பாரதியின் பிறப்பு 1882 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது. சிறுவனாக, பத்து வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். தகப்பனார் சின்னசாமி அய்யர் எட்டயபுரம் ஜமீனில் வேலை பார்த்து வந்தார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் பாரதியோ படிப்பில் நாட்டம் கொள்ளாமல் போனதுடன் பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியையே சந்தித்தார். திடீரென ஒருநாள் தந்தை மறைய, குடும்பம் பொருளாதாரத்தில் நலிவடைந்தது. பாரதி காசியிலிருந்த தனது அத்தை வீட்டிற்குச் சென்றார். அங்கு இந்தியும், சமஸ்கிருதமும் பயின்றார். இங்கிருக்கும் போதுதான் அவரது உருவ அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. தலைப்பாகை போன்றவற்றுடன...
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நாஞ்சில்நாடு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி. 1956இல் மொழி வாரி மாகாணங்கள் அமைவது வரை திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மலையாளத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டுப் பகுதி தமிழுக்கு அளித்த கொடை மிக அதிகம். தசாவதானி செங்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ம.அரங்கநாதன், பொன்னீலன், தமிழவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, தோப்பில் முகம்மது மீரான் போன்ற மிகச் சிறந்த இலக்கிய வாதிகளை தமிழுக்குத் தந்திருக்கிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகச் சிறந்த கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக் குட்டி' 'தம்பியே ...
கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு. கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம். 1936இல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த 'சந்திரமோகனா' என்னும் திரைப்படத்தில் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937இல் மைனர் ராஜாமணி என்கிற படத்தில் ஒரு நல்ல வேடம். சிங்காரப் பப்புச் செட்டியார். தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், நந்தனார் (ஜெமினி) பக்த நாரதர், தாசி அபரஞ்ச...
பாரதிதாசன்

பாரதிதாசன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம். இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார். பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார். இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்கிற கவிதை மிகவும் பிரபலமானது. 1937இல் முதன் முதலாக 'பாலாமணி' என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940இல் 'காளமேகம்' என்கிற படத்தின் வசனம் - பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத...
பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. 'தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்' என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது. தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் ...
பி. எஸ். ராமையா

பி. எஸ். ராமையா

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வத்தலகுண்டு: இந்த ஊர் முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்தது. இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. வத்தலகுண்டு என்பதை ஆங்கிலத்தில் பத்லகுண்டு என்பார்கள். இந்த பத்லகுண்டு ஊரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்த ஊர் ஆத்தூர் என்கிற கிராமம். இந்த ஊரைச் சார்ந்த சுப்ரமணிய அய்யரின் மகன்களில் ஒருவர் ராமையா. சுப்ரமணிய அய்யர் பிழைப்புக்காக வந்து சேர்ந்த ஊர் பத்லகுண்டு. எனவே பத்லகுண்டு நாளடைவில் இவர்களுக்கு சொந்த ஊராக மாறியது. எனவே ராமையாவுக்கு பத்லகுண்டு சுப்ரமணிய ராமையா என்கிற பெயர் நிலைத்து பின்பு சுருங்கி பி.எஸ்.ராமையாவாக மாறியது. மிகவும் ஏழ்மையான குடும்பம். வத்தலக்குண்டுவில் மூன்றாவது ஃபாரம் (8ம் வகுப்பு) வரை தான் படிக்க முடிந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்தவர் ராமையா. வறுமை கொடூரமாகத் தாக்கியது. பிழைப்பைத் தேடி தனது 16வது வயதில் மதராஸ் வந்து சேர்ந்தார். 1921இல் மதராஸ் ப...
இளங்கோவன்

இளங்கோவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த முதல் வசன கர்த்தா இளங்கோவன். இவர் 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். சிலகாலம் 'தினமணி' பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். பி.யூ.சின்னப்பா நடித்த 'கண்ணகி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம்.கே.டி.பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு விசேஷத் திறமை படைத்தவர். திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச் சொல்ல முடியும். 1937இல் ஆரம்பித்த இவரது பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார் 30 திரைப...
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு. 1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த 'நவசக்தி' பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930இல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932இல் விடுதலையாகி வந்த பின், எஸ்.எஸ்.வாசனின...
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். 'இந்திர மோகனா' என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் 'வைதேகி'. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் ...
ஜே.ஆர். ரங்கராஜு

ஜே.ஆர். ரங்கராஜு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்' என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே 'ராஜாம்பாள்' என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.  கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் 'மோசம் போனேன் கோபாலா' என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிக...