
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன.
அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார்.
இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...















