

ரைசிங் ஸ்டார் விஜய் கனிஷ்காவுக்குச் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள் 2025இல், அவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஹிட் லிஸ்ட்’டில் தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது.
‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. கனிஷ்கா திரையில் தோன்றிய விதமும், வசீகரிக்கும் கதை சொல்லலும், அப்படத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

