
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review
பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான்.
மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு.
முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவத...