32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

Dinesh R சேலம் Published: 24/02/2020 2 நிமிட வாசிப்பு Others
எழுத்து அளவு:

kanni-maadam-gold

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குநர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.

இந்தப் படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இந்தத் தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.

அதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹஷீர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.