Shadow

ECON 2025 – வலிப்பு நோய் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த கருத்தரங்கு

இந்திய கால்-கை வலிப்பு சங்கம் (IES – Indian Epilepsy Society) மற்றும் இந்திய கால்-கை வலிப்பு சங்கம் (IEA – Indian Epilepsy Association), ECON 2025 இன் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து, ECON 2025 இன் வருடாந்திர கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கு, சென்னை லீலா பேலஸில், ஆகஸ்ட் 21 முதல் 24 வரை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை தொடர்புடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, கால்-கை வலிப்பு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்து.

கருத்தரங்கின் தொடக்க விழா ஆகஸ்ட் 22, 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்குச் சென்னை லீலா பேலஸில் உள்ள கிராண்ட் பால்ரூமில் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி, இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர், “வலிப்பு நோய் என்பது கடுமையானதாகப் பார்க்கப்பட்டாலும், அது குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். இதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். வலிப்பு நோயைக் காக்கா வலிப்பு என அவமானகரமான சொல்லை அழைக்கிறார்கள். இது போன்ற சொற்களுக்கு நாகரிகமான மாற்று சொற்களை உருவாக்கவேண்டும்” என்றார்.

ECON 2025 இன் அறிவியல் நிகழ்ச்சியில், மருத்துவ பராமரிப்பு, அறுவை சிகிச்சை, மரபியல் மற்றும் கால்-கை வலிப்புக்கான பொது சுகாதார முயற்சிகளில் புதுமைகளை மையமாகக் கொண்ட முழுமையான அமர்வுகள், கருத்தரங்குகள், இடைவினை பட்டறைகள் (interactive workshops), நேர்வு ஆய்வு விவாதங்கள் (case discussions) மற்றும் கால்-கை வலிப்பு வினாடி வினா ஆகியவை இடம்பெறும்.

இக்கருத்தரங்கைப் பற்றிப் பேசிய ECON 2025 இன் அமைப்புச் செயலாளர் டாக்டர் K. மால்கம் ஜெயராஜ், “சென்னையில் ECON 2025-ஐ நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கருத்தரங்கு அறிவியல் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், இந்தியாவில் கால்-கை வலிப்பு சிகிச்சை மற்றும் பராமரிப்பை வலுப்படுத்துவதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒரு படி முன்னெடுத்துச் செல்லும் களமாக அமைகிறது” என்றார்.

ECON 2025 கருத்தரங்கு, நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, நரம்பியல் மற்றும் கால்-கை வலிப்பு சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.