ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது
தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம், ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
...