பல ஆண்டுகளாகவே ஸ்விட்சுகள் (Switches) மற்றும் அவை தொடர்பான வீட்டு உபகரணங்களைத் தயாரித்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் – GM Modular! தர மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் நிறுவனமிது! இந்நிறுவனத்தில் பிரதான தூதராக இணைகிறார் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.
JITO CONNECT 2018 நிகழ்வின் போது பொலிவுடன் கூடிய புதியதொரு பொருள் அட்டவணையை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்! புதிய பரிமாணங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கில் அந்நிறுவனத்தின் புதியதான அறிமுகப் பொருட்கள் அணிவகுத்து நிற்கும்! ஸ்மார்ட் ஸ்விட்ச்கள், மெல்லிய மிருதுவான ஸ்விட்ச்கள், ரிமோட் கன்ட்ரோல் மற்றும் Wi-Fi ஸ்விட்ச்கள், மேல்நிலை ஆட்டோமேஷன் அமைப்புகள், Bluetooth சம்மந்தப்பட்ட கேளிக்கை வழங்கவல்ல i-Dock போன்றவையும் அணிவகுத்து நிற்கும்!
சக்தியை (Energy) சேமிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவும் வகை வகையான LED விளக்குகளும் அதில் அடங்கும்!
ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த நிறுவனமான ஸ்வரோவ்ஸ்கி, யூ.எஸ்.-இன் டிஸ்னி தொடர்பில் உள்ள நிறுவனம், GM Modular. ஸ்விட்ச் ப்ளேட்டுகள் இரவு நேர விளக்கு வகைகள் மற்றும் காண்போரைக் கவரவல்ல புதுமை நல்கும் பொருள் வகைகளும் இவர்களது தயாரிப்புப் பட்டியலில் அடங்கும்!
பெல்ஜியத்தின் KNX Intelligent Building Control System-த்தோடும் இந்நிறுவனம் தொழில் ரீதியான தோழமை கொண்டுள்ளது!
உலக அளவில், சக்தி (Energy) சேமிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடு ஆகிய அம்சங்களிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது, GM Modular நிறுவனம்.
இத்துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்நிறுவனம், தரம் நிறைந்த ஸ்விட்ச்கள், LED விளக்கு உபகரணங்கள், எலக்ட்ரிகல் உபகரணங்கள் Modular LED Copper மற்றும் Aluminium ஒயர்கள், கேபிள்கள் என பலவகைப் பொருட்களையும் பல தரப்பட்ட இடங்களிலும், தொழிலகங்களிலும், மால்களிலும், மல்ட்டிப்ளக்ஸ்களிலும், மற்றும் வீடுகளிலும் நிறுவியுள்ளது. தரம் தவிர பாதுகாப்பும் கூட இந்நிறுவனத்தின் தாரக மந்திரம் தான்!
‘தொழில்நுட்ப மேம்பாடே எங்களது நிறுவனத்தின் நிரந்திர இலக்கு!’ என்கிறார் திரு. ரமேஷ் ஜெயின், GM Modular நிறுவனத்தின் சேர்மன்.
‘பிரபல ஹாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி (Suniel Shetty), நமது நிறுவனத்தின் பிராண்ட் தூதராகச் செயல்படுவார்’ என்கிறார் திரு. ஜெயந்த் ஜெயின் CEO. ‘நடிகர், தொழில் மற்றும் விளையாட்டு ஆர்வலரான அவர் தான் இதற்குப் பொருத்தமானவர்’ என்கிறார் ஜெயந்த்.
“GM நிறுவனத்தின் பிராண்ட் தூதராகச் செயல்படுவதில் மகிழ்ச்சி! தூதராகச் செயல்படுவதால் சொல்லவில்லை, எங்கள் வீட்டிலும் எனது பல ப்ராஜெக்டிலும் GM மாடுலர் பொருட்களைத்தான் பயன்படுத்துகிறேன். இத்தகைய தரமான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைவதில் மிகப் பெருமிதம் கொள்கிறேன். நான் ஜி.எம். நீங்க?” என்கிறார் சுனில்.