Shadow

டெஸ்ட் | TEST review – NetFlix

விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது.

குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், இறுக்கமான முகத்துடன் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரம் வாய்த்திருந்தும் அவர் சரியாக அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சின்ன கதாபாத்திரம் என்றாலும், காணாமல் போகும் தன் மகனுக்காக வெடிக்கும் பொழுது மீரா ஜாஸ்மின் தன் இருப்பினைப் பதிகிறார். எந்தப் பாத்திரம் ஏற்றாலும், ஒரு ஸ்டாராகவே தன்னைத் திரையில் காட்டிக் கொள்ள விழையும் சித்தார்த், நட்சத்திர வீரராகவே ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால்? கிரீடத்தை இறக்கி வைக்காமல் சுமந்தவாறே திரிகிறார்.

கையாலாகதத்தனமும் விரக்தியும், அதனால் உருவாகும் கோபமும் கொண்ட விஞ்ஞானி சரவணனாக மாதவன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உலகையே பிரமிக்க வைக்கும் ஓர் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பை உருவாக்கிய மகிழ்ச்சியான மாதவன் மெல்ல மறைந்து தோல்வியின் வலியைச் சுமக்கும் மாதவனாக மாறுகிறார். எவருக்கும் ஏற்படாதக்கூடாத கொடுமையான சூழல் அது. உண்மையான சோதனையை இப்படத்தில் அனுபவிப்பது விஞ்ஞானி சரவணன் தான். மற்ற இரு பாத்திரங்களும் கனெக்ட் ஆகவில்லை. அல்லது தங்கள் நடிப்பால் அதைக் கடத்தத் தவறியுள்ளனர். சக்திஸ்ரீ கோபாலானின் பின்னணி இசை படத்திற்

ஐபிஎல் காலகட்டத்தில், பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியைப் போர் போல் கட்டமைக்க முனைந்துள்ளார் அறிமுக இயக்குநர் சசிகாந்த். அர்ஜுன் வெங்கட்ராமன் நன்றாக ஆடவேண்டுமென்ற பதற்றமோ, அவரது மகன் கடத்தப்பட்டுள்ளார் என்ற கோபமோ பரிதாபமோ பார்வையாளர்களுக்கு எழவே இல்லை. குமுதாவின் ஏக்கமும் அப்படியே கனெக்ட் ஆகாமல் அந்நியமாக உள்ளது. மாதவன் கடைசி முறை வரை முயன்று தனியொருவராகப் போராடிப் பார்க்கிறார்.