32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி

Dinesh R சேலம் Published: 28/08/2025 3 நிமிட வாசிப்பு Updated: 29/08/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாஸ்’ எனும் ஹிந்தித் திரைப்படம், இந்தியப் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள திரிக்கப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஓர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியரின் பயணத்தைப் பற்றியதாகும். மன்பிரீத் சிங் தாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, பஞ்சகர்மா ப்ரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம், பார்வையாளர்களைத் தங்கள் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கவும், வரலாற்று உண்மைகளை விமர்சன ரீதியாக மறு மதிப்பீடு செய்யவும், கடந்த காலத்தைப் பற்றிய அவர்களின் அடிப்படை புரிதலை மறுபரிசீலனை செய்யவும் தூண்டும்.

இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்வதற்கான உந்துதலை இப்படம் வழங்கும் என்கிறார் இயக்குநர் மன்பிரீத் சிங் தாமி. மேலும், “சினிமா மக்களைச் சிந்திக்கவும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கேள்வி கேட்க வைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. எங்கள் திரைப்படம் அந்த விமர்சன சிந்தனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை அவர்களின் பாடப்புத்தகங்களின் பக்கங்களுக்கு அப்பால் பார்க்க ஊக்குவிக்கிறது. ஆழ்ந்த புலமையுடைய பாரதிய சிறப்பு மையத்துடன் இணைவதன் மூலம், அறிவுப்பூர்வமாகவும் உணர்ச்சி ரீதியாகவும் செயல்படக்கூடிய ஒரு இயக்கத்தை உருவாக்கிக் கல்விசார்ந்து ஓர் அடுக்கைக் கூடுதலாக எட்டியுள்ளோம்” என்றார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்திய அறிவுசார் அமைப்புகள் (IKS) ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னோடி நிறுவனம் பாரதிய சிறப்பு மையமாகும். மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் (KSRI) ஆகியவற்றின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் பாரதிய சிறப்பு மையம். அது, பஞ்சகர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, கல்விசார்ந்த இயக்கத்தையும், வலிமையான திரைப்படத்துறையையும் ஒன்றிணைக்கிறது. பாரதிய சிறப்பு மையம், உண்மையான இதிஹாசா திட்டத்தைப் (The True Ithihasa Project) பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. அத்திட்டம், இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தை மறுகட்டமைக்கத் தொல்லியல், மரபியல் மற்றும் மொழியியல் போன்ற துறைகளில் இருந்து சான்றுகள் சார்ந்த கடுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும். பாரதிய சிறப்பு மையத்தின் இந்த ஆராய்ச்சி நோக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள ‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாஸ்’ படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி, நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கும், புகழ்மிக்க கலாச்சாரத்துக்கும் இடையிலானதொரு பாலமாக அமையும். இதன் மூலமாக, காலனித்துவமான வரலாற்றை மீட்டு, தேசிய அடையாளத்தைக் கண்டெடுக்கலாம். மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்டு வரலாற்று மதிப்பீட்டின் பரவலான இவ்வியக்கத்தை தூண்டுவதற்காக ஐஐடி மெட்ராஸ் மற்றும் RR சபா மயிலாப்பூர் உள்ளிட்ட மதிப்புமிக்க இடங்களில் இப்படம் செப்டம்பர் மாதத்தில் திரையிடப்படும். 

“ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி, பாரதியார் அறிவு அமைப்புகளின் அரணாக இருந்து வருகிறது” என்று மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியின் அறங்காவலர் ரமேஷ் மகாலிங்கம் கூறினார். “இந்தக் கூட்டணி, நமது பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாகும். ஆழமாக வேரூன்றிய நமது கல்வி மரபை எடுத்து நவீன பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. திரைப்படம் போன்ற சக்திவாய்ந்த ஊடகத்துடன் இணைவதன் மூலம், நமது உண்மையான இதிஹாசம் பற்றிய அத்தியாவசிய உரையாடல் சமூகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம். காலத்தால் அழியாத நூல்களைச் சமகால வழிமுறைகளுடன் இணைப்பதன் மூலம், நவீன சவால்களை எதிர்கொண்டு இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் திறப்பதே IKS (Indian Knowledge Systems) இன் முக்கிய நோக்கமாகும். இது, பழங்காலத்தை எண்ணிப் பார்க்கும் பாரதிய ஞான பரம்பரையின் ஏக்கம் பற்றியது அல்ல; அதி உன்னதமான நாகரிகத்தைத் தூண்டி வளர்ச்சியடைந்த பாரதத்தை (Viksit Bharath) உருவாக்குவதைக் குறித்தாகும்” என்றார்.

மேலும், “கடந்த காலத்தை எதிர்த்துப் போராடுவது எங்கள் குறிக்கோள் அல்ல. மாறாக பாரதத்தின் பாரம்பரியத்தின் உண்மையான உணர்வால் எதிர்காலத்தைச் சித்தப்படுத்துதே எங்கள் குறிக்கோள். கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மட்டுமல்லாமல், பண்டைய ஞானத்தின் ஒப்பற்ற ஒளியுடன் எதிர்காலத்தை உருவாக்குவதன் மூலம், நமது பாரம்பரியத்தை அமைதியிலிருந்து வலிமைக்கு நகர்த்துவதற்காக, அறிவு மறுமலர்ச்சியின் விளிம்பில் நாங்கள் நிற்கிறோம்” என்று மகாலிங்கம் வலியுறுத்தினார். உண்மையான இதிஹாச திட்டம் சித்தாந்தத்தில் அல்ல, ஆதாரங்களில் அடித்தளமாக உள்ளது. ‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாசா’வுடனான இந்தக் கூட்டு, தேசிய அளவில் விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், அணுகக்கூடிய மற்றும் உணர்ச்சி ரீதியான எதிரொலிக்கும் வகையில் அறிவார்ந்த கண்டுபிடிப்புகளை முன்வைக்க அனுமதிக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.