32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Hombale Films | மகா அவதார் நரசிம்மா – முதல் வாரத்தில் 53 கோடி வசூல்

Dinesh R சேலம் Published: 03/08/2025 1 நிமிட வாசிப்பு Updated: 05/08/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

ரசிகர்களைப் பரவசப்படுத்தும் வகையிலும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெளியான மகா அவதார் நரசிம்மா முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய ‘மகாஅவதார் நரசிம்மா’ இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் இப்படம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், புராணக் கதைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான கதை சொல்லல் பாணியின் மூலம், இந்திய சினிமாவை மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்திய அடையாளத்தில் வேரூன்றிய பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியம் மேலும் தொடரும். காந்தாரா: சாப்டர் 1, மகாஅவதார் பரசுராம் என வரவிருக்கும் படங்களே அதற்குச் சாட்சி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.