Shadow

Tag: Hombale Films

ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

ஹாட்ஸ்டாரில் இந்தி ‘பாகீரா’ ஸ்ட்ரீமிங்

OTT, அயல் சினிமா, சினிமா
KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹோம்பாலே பிலிம்ஸின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலைப் பெற்ற கன்னடப் படமாக மாறியது. இந்தச் சமூக காவலன் த்ரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காகத் தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது.டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூகக் காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையைக் கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்தி வாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில்...
Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

OTT
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும்.நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காண உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது நாங்கள் எடுத்துக் கொண்ட கருவினைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார். ஹோம்பாலே பி...
சலார் – ட்ரெய்லர்

சலார் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
 ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த ட்ரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர். பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் ‘சலார்: பார்ட் 1 - சீஸ்ஃபயர்’ படத்தின் ட்ரெய்லர் முழுக்க முழுக்க த்ரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த ட்ரெய்லர், உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிற...
“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

“காந்தாரா: இந்திய சினிமாவின் மகத்தான படைப்பு” – ரஜினி புகழாரம்

சினிமா, திரைத் துளி
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே.ஜி.எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரி...
காந்தாரா – 200 கோடி வசூலைத் தாண்டி

காந்தாரா – 200 கோடி வசூலைத் தாண்டி

சினிமா, திரைத் துளி
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே.ஜி.எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் 'காந்தாரா' படத்த...
KGFஇன் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் சுதா கொங்கரா

KGFஇன் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்கும் சுதா கொங்கரா

சினிமா, திரைத் துளி
மிகத் தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களைத் தந்து கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பேல் பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உட்பட, சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தைத் துவங்கவிருக்கிறார்....
“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ்

“KGF – இது பிரசாந்த் நீலின் படம்” – யஷ்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தைப் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திர...
KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

சினிமா, திரைத் துளி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கேஜிஎஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரக...