Shadow

சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

வணக்கம் தோழிகளே,

IMG_20181012_182601

இன்னைக்கு நாம, சப்பாத்தி – காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க.

தேவையான பொருள்கள்:

மாவு பிசைய:

 

1.    கோதுமை மாவு –  ½ கிலோ

2.    தண்ணீர்- தேவையான அளவு

3.    உப்பு- தேவைக்கு

 

குருமா:

 

1.    கேரட்- 1

2.    பீட்ரூட்- 1

3.    காலிபிளவர்-50 கிராம்

4.    பீன்ஸ் – 50 கிராம்

5.    உருளை கிழங்கு– 3

6.    பெரிய வெங்காயம் -1

7.    தக்காளி- 1

8.    கறிவேப்பிலை- கைப்பிடி

 

 

அரைக்க:

 

1.   இஞ்சி- 1 துண்டு

2.    பூண்டு- 6 பல்

3.    தேங்காய்- ½ மூடி

4.    பொட்டுகடலை–½ கப்

5.    மல்லி தூள்-1 கரண்டி

 

செய்முறை:

Step 1:

IMG_20181012_205914

முதலில் மாவைப் பாத்திரத்தில் போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கையில் ஒட்டாமல் வரும் அளவு, மிருதுவாகப் பிசைந்து உருன்டையாக உருட்டி, மேலே சிறிது எண்ணெய் தடவி, மூடியால் மூடி ஊறவைக்கவும். அது ஊறும் சமயத்தில், நாம் குருமா செய்து விடலாம்.

Step 2:IMG_20181012_210041

இஞ்சி, பூண்டு, தேங்காய், மல்லித்தூள், பொட்டுக்கடலை, இவையனைத்தையும் ஒன்றாய்ப் போட்டு, தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

Step 3:IMG_20181012_182601 - Copy

காய்கறிகளைத் தேவையான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

Step4:

IMG_20181012_210320

குக்கரில், எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

Step 5:

IMG_20181012_210344

பிறகு, நறுக்கிய காய்கறி, தேவையான உப்பு போட்டு வதக்கவும். 1 நிமிடம் கழித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கர் மூடி போட்டு, 3 விசில் வரும் வரை விட்டு, அடுப்பை ஆஃப் (off) செய்யவும்.

Step 7:

IMG_20181012_210454

இப்பொழுது, ஊறவைத்த மாவை எடுத்து சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையால் தேவையான வடிவத்தில் தேய்த்து எடுக்கவும். அதை, சுடு தோசை கல்லில் இட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, வெந்தவுடன் எடுத்துப் பாத்திரத்தில் அடுக்கவும்.  குக்கர் ஆறியதும், குருமாவை எடுத்துப் பாத்திரத்தில் வைத்துப் பரிமாறவும்.

சுவையான, சத்தான சப்பாத்தி- குருமா ரெடி.

IMG_20181012_182601

செஞ்சு பார்த்துட்டு, எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க.

– வசந்தி ராஜசேகரன்