Shadow

மீன் ரோஸ்ட்

வணக்கம் தோழிகளே,

IMG_20181014_232233

“மீன் ரோஸ்ட்”, நல்லா மொறுமொறுன்னு சுவையான ரோஸ்ட்,  அதுவும் இந்த மழைக் காலத்தில், புரட்டாசி வேற முடிஞ்சிருச்சு, சொல்லவே வேனாம் போங்க. அடடே,,, கேட்டாலே நிறைய பேருக்கு! சரி சுவை மட்டும்தானா?  மீன்ல பார்த்தா ஒமேகா 3 அமிலங்கள் அதிகமா இருக்குது. இது உடம்பு தன்னால உருவாக்க முடியாத மிக முக்கியமான அமிலம். அதனால மீன் ரொம்ப சத்தானதுங்க. சரி இன்னைக்கு, சுவையான மீன் ரோஸ்ட் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

IMG_20181014_081653

  1. மீன் – 1 கிலோ
  2. பூண்டு – 8 பல்
  3. மிளகாய் தூள் – 2 குழி கரண்டி
  4. மிளகு – 1 ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் – 10-15
  6. மைதா – 1 கரண்டி
  7. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

 

Step 1:

IMG_20181014_084844

மைதா, எண்ணெய், மீன் தவிர, மீதி எல்லாப் பொருளையும் மிக்சியில் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. நல்லா அரைச்ச பிறகு, மைதா போட்டு, ஒரு சுத்து மிக்சில விடுங்க.

Step 2:

IMG_20181014_092414

இப்போ, அரைச்சு வச்ச விழுதை அப்படியே, சுத்தம் செய்து வச்சிருக்கிற மீன்ல நல்லா தடவி, ஒரு அரை மணி நேரம் ஊற வைங்க.

Step 3:

IMG_20181014_093438

அடுத்து என்ன? வடசட்டியில், எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ஞ்சதும், மீனை போட்டு நல்லா ரெண்டு பக்கமும் புரட்டிப் போட்டுப் பொரிச்சு எடுத்தா, சும்மா வாசனை ஆளையே தூக்கும் போங்க!!

IMG_20181014_232312

நான் பொரிக்க, தேங்காய் எண்ணெய்தான் உபயோகிப்பேன், சுவை செமயா இருக்கும்.. செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.

– வசந்தி ராஜசேகரன்