Shadow

“பாகவதர் காலத்துல இருந்து சினிமாவில் வராத கதை” – எஸ்.ஜே.சூர்யா

சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் ராகவன், “கடமையை செய்” எனும் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆன்ந்த், மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்பட்த்தைப் பற்றிப் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து, அதாவது சினிமா தோன்றிய காலத்திருந்து வராத கதையை இயக்குநர் எடுத்துள்ளார். அதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கோமா பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். அதில் ஸ்டூப்பர்ன்னு ஒன்னிருக்கு. கோமா என்றால், ப்ரெயின் டெத், பாடி டெத், ஆனா உள்ளிருக்க்க் கூடிய இன்னர் ஆர்கன்ஸ் மட்டும் வொர்க் பண்ணிட்டிருக்கும். அதாவது, ஹார்ட், கிட்னி போண்றவை வொர்க் பண்ணும். ஆனா மொத்த சிஸ்டம் ஷட்.

ஸ்டூப்பர் என்பது என்னென்னா, ப்ரெயின் ஆக்டிவாக இருக்கும். பாடி டெத். அவனால் பேச முடியும். ஆனா வெளில இருக்கிறவங்களுக்குக் கேட்காது. அப்படியொரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.