நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா.
1. பாடல் – காதல் இருந்தால் போதும்
பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி
அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
2. பாடல் – என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே
பாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம்
லியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புது ரகம். ரெமோ படத்தில் சிரிக்காதே பாடலின் கவர் வெர்ஷனைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன்காரரின் தமிழ் உச்சரிப்பை ஓரம் கட்டிவிட்டு கேட்டால் உங்களுக்கும் பல்ஸ் எகிறும்.
3. பாடல் – நீ தொலைந்தாயோ
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்
கோ சேஷா வின் பாடல் வரிகள் அருமை. அழகிய மெலடி. சித் ஸ்ரீராம் குரல். வேறென்ன சொல்ல? மெய் மறந்து ரசிக்கும்படி இருக்கிறது.
4. பாடல் – உன் காதல் இருந்தால் போதும்
பாடியவர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்
அர்மான் மாலிக் பாடிய பாடலின் ஃபீமேல் வெர்ஷன். இந்த அருமையான மெலடிக்கு உயிர் கொடுத்திருக்கிறர் வந்தனா.
இந்தப் படம் ஜீவாவிற்கு ஒரு பிரேக் கொடுக்குமா என்பது படம் வந்த பின்பே தான் தெரியும். ஆனால் நிச்சயம் லியோன்க்கு ஒரு பெரிய வெற்றியைத் தேடி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
– இரகுராமன்