32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

Dinesh R சேலம் Published: 15/02/2021 2 நிமிட வாசிப்பு Updated: 11/03/2021 சமூகம்
எழுத்து அளவு:

உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் தினங்களில் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்திலாயங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல். ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் புதுமலராய் பூத்தவண்ணம் இருக்கிறது.

இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்களும் இளைஞர்களும் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் தமிழக அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்குப் புதிய அடையாளம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். தன் பேரனைத் தோளில் சுமந்து, “ஹாப்பி வேலண்டைன்ஸ் டே” என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்தப் படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Jeyakumar-with-grandsonஇது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “பிப்ரவரி 14 என்பதைப் பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க. அதுவல்ல அதற்கான அர்த்தம். காதல் அப்படிங்கறது பொதுவானது. மனுசங்க அடுத்த மனுஷங்க மேல காட்டுற அன்பும்,பரிவும், பாசமும், கருணையும் எல்லாமே காதலின் வடிவம் தான். அதனால காதலர் தினம் அப்படிங்கறத நாம தனிப்படுத்தி வேறுபடுத்திக் காட்டமுடியாது. எல்லா மனுஷங்களும் எல்லார்கிட்டயும் அன்பு காட்டி அனுசரிச்சுப் போனா இந்த உலகம் இன்னும் ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கும். மனுஷங்க இத புரிஞ்சுக்கணும்,அதுவும் குழந்தைகள் மேல நாம காட்டுற பாசம் அலாதியானது. உலகமே தெரியாத அந்தக் குழந்தைகள் நம்மள பார்த்து சிரிக்கிறது, மடியில் தவழ்ந்து விளையாடுறது தனி சுகம்… அதுமாதிரியான அன்புதான் காதலின் உண்மையான வடிவம். அதனாலதான் என் பேரனைத் தோளில் சுமந்தபடி எடுத்த போட்டோ இது, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று முடித்துக் கொண்டார்.

கா த ல் – இந்த மூன்று எழுத்தால் தான் இந்த உலகம் இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தை அன்பும், காதலும் கொண்டு பொடி நடையாக நடந்து வருவோம். நம்மைச் சுற்றியுள்ள கவலைகள் யாவையும் கடந்து செல்வோம். ஆதலால் காதல் செய்வீர்!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.