32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாயோன் – டொரன்டோ சர்வதேச விழாவில் விருது

Dinesh R சேலம் Published: 25/11/2022 1 நிமிட வாசிப்பு Updated: 29/11/2022 சினிமா
எழுத்து அளவு:

தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித்  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் (Twitter Stats) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆன்மிகத்தையும் அறிவியலையும் ஒரு சேர இணைத்துப் பேசிய இந்தப் படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47ஆவது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது.

தற்போது வரை மாயோன் படத்தின் OTT உரிமையை எந்த ஒரு நிறுவனமும் கைப்பற்றாத நிலையில், மாயோன் படம் OTT இல் எப்பொழுது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.