Shadow

Tag: V Creations

ஆளவந்தான் விமர்சனம்

ஆளவந்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதயம் பேசுகிறது’ இதழில், 80களில் “தாயம்” என்ற பெயரில் கமல் எழுதிய தொடர், 2001 இல் ‘ஆளவந்தான்’ ஆகத் திரையேற்றம் கண்டது. திரைக்கதை, வசனத்தைக் கமல் எழுத, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வெளியான போது 178 நிமிடங்கள் கால அளவினைக் கொண்ட படத்தைத் தற்போது 122 நிமிடங்களாகச் சுருக்கி, 4K தெளிவுத்திறனில் (resolution) வெளியிட்டுள்ளனர். சித்தி கொடுமைக்கு உள்ளாகும் விஜயும் நந்துவும் இரட்டையர்கள். விஜயை, அவரது மாமா இராணுவப்பள்ளியில் சேர்க்க, தந்தையுடன் தங்கும் நந்துவோ சித்தியைக் கொன்ற குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். இராணுவ அதிகாரியாகும் விஜய், தேஜஸ்வினியைக் காதலித்துத் திருமணம் புரிகிறார். சித்தி தான் தேஜஸ்வினியாக வந்துள்ளார் என நம்பும் மனச்சிதைவுடைய (schizopernia) நந்து, தேஜஸ்வினியைக் கொன்று விஜயைக் காப்பாற்ற நினைக்கிறான். வேட்டையாடப் பயிற்சியெடுத்த விஜய் தேஜஸ...
மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

சினிமா, திரைத் துளி
"சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே இந்தத் ‘துப்பாக்கி முனை’ கதையின் சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம்” என்று இயக்குநர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இ...
“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும...