32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

Dinesh R சேலம் Published: 11/04/2019 2 நிமிட வாசிப்பு Updated: 15/04/2019 சினிமா
எழுத்து அளவு:

Mehandi-circus---3-love

“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சு செஞ்சிருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது; ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில். இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு. சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் என் கேரக்டரான ஒத்த வெடி அப்படி” என்றார் ஆர்.ஜே விக்னேஷ் காந்த்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப் படத்திற்கு இன்புட். என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாகச் சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படிக் கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடிக்கும் நடிகர் போல இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப் படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப் படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.