Shadow

Tag: Walt Disney Pictures

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஷாருக் கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், ஆப்ராம் கானும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'முஃபாஸா: தி லயன் கிங்' திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பேரி ஜென்கின்ஸின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவில் டிசம்பர் 20, 2024 அன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கெளரவ பூமியின் கடைசி ராஜாவான முஃபாஸாவின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இப்படம். இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், அப்ராம் கானும் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள்.தி லயன் கிங் எனும் லைவ்-ஆக்ஷன் படம், 2019 இல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக்கான் முஃபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார். காட்டு ராஜாவைக் காணப் பார்வைய...
முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர்.இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது....
ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழகப் பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளார். ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜயின் சர்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்குத் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாபாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி (விஜய்...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
டாய் ஸ்டோரி 4 விமர்சனம்

டாய் ஸ்டோரி 4 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
"நட்புன்னா என்ன?" - ஃபோர்க்கி "நானும், நீயும்தான்" - வுட்டி "குப்பையா?" - ஃபோர்க்கி மேலே உள்ள அந்த இமேஜும், இந்த வசனங்களும் தான் ஒட்டுமொத்த படத்தின் சாராம்சமே! போனி எனும் சிறுமி, குப்பைத் தொட்டியில் வீசப்படும் ஃபோர்க் வகை ஸ்பூனில் இருந்து ஒரு பொம்மையைச் செய்கிறாள். அந்த பொம்மைக்கு உயிர் வந்துவிடுகிறது, ஆனாலும் அது தன்னை ஒரு பொம்மையாக ஏற்றுக் கொள்ள முடியாமல், தானொரு குப்பைதானே என மனமுடைந்து, குப்பைத் தொட்டியைத் தேடி அதில் சென்று விழ சதா முயன்று கொண்டே இருக்கிறது. ஃபோர்க்கி விழும் ஒவ்வொரு முறையும், டாய் ஸ்டோரி 1,2,3 பாகங்களின் நாயகன் ஷெரிஃப் வுட்டி, ஃபோர்கியை சிறுமி போனியிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான். ஒருமுறை ஓடிக் கொண்டிருக்கும் வேனில் இருந்து ஃபோர்க்கி வெளியில் குதித்துவிடுகிறது. போனிக்கு ஃபோர்கியைப் பிடிக்கும் என்பதால், ஃபோர்கியை மீட்க வுட்டியும் வேனில் இருந்து குதிக்கிறான். வுட்டி...